திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

அனுஷ்காவை ஒருதலையாக காதலித்த பிரபல நடிகர்.. லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறாரா தேவசேனா?

Anushka Shetty: நடிகை அனுஷ்கா செட்டி யோகா ஆசிரியராக இருந்து, நடிப்புத் துறைக்கு வந்தவர். இன்றுவரை இவருடைய அழகு சினிமா ரசிகர்களாலும், பிரபலங்களாலும் போற்றப்பட்டு வருகிறது. ஒரு இயக்குனரின் மீது வைத்த நம்பிக்கையின் பேரில் அந்த படத்திற்காக எக்கச்சக்க எடையை கூட்டி நடிக்கும் அளவுக்கு தைரியமான நடிகை இவர் ஒருவர் தான் என்று சொல்ல வேண்டும்.

அனுஷ்கா தமிழ் சினிமாவில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் இரண்டு திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், அருந்ததி திரைப்படம் தான் அவரை ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களிடமும் கொண்டு சேர்த்தது. அதன் பின்னர் தமிழில் வேட்டைக்காரன், என்னை அறிந்தால், இரண்டாம் உலகம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

Also Read:இந்த பூனை பால் குடிக்குமா.. அப்பாவியாக மூஞ்சியை வைத்துக்கொண்டு பலான வேலைகளை பார்த்த நடிகை

இரண்டாம் உலகம் திரைப்படத்தின் நடித்துக் கொண்டிருக்கும் போது நடிகர் ஆர்யாவுக்கு அனுஷ்கா மீது பயங்கரமான காதல் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆர்யாவை பொறுத்த வரைக்கும் தமிழ் சினிமாவில் காதல் மன்னன் ஆகவும், பிளே பாய் ஆகவும் இருந்தவர். பல நடிகைகளும் அவர் மீது காதலில் இருந்த காலத்தில், ஆர்யா விரும்பி காதலித்தது அனுஷ்காவை தானாம்.

ஆனால் அனுஷ்கா ரொம்ப தெளிவாக இதற்கெல்லாம் பிடி கொடுக்காமல் படப்பிடிப்பு வேலைகளை முடித்துவிட்டு சிட்டாக பறந்து விட்டார். அனுஷ்காவிற்கு அருந்ததி திரைப்படத்திற்கு பிறகு இந்திய சினிமாவில் கிடைத்த மற்றுமொரு அங்கீகாரம் பாகுபலி நடித்த தேவசேனா கேரக்டர் மூலம் தான். முதல் பாகத்தில் சாதாரணமாக வந்து போகும் அனுஷ்கா இரண்டாம் பாகத்தில் மொத்த கதையையும் தாங்கி நடத்திருந்தார்.

Also Read:இருட்டில் சேரலாம், வெளிச்சத்துக்கெல்லாம் ஆசைப்படாதே.. நடிகை கல்யாணம் என்றவுடன் கம்பி நீட்டிய அரசியல்வாதி

பாகுபலி பட சமயத்தில் அனுஷ்கா மற்றும் பிரபாஸ் இருவரும் காதலிப்பதாக ஒட்டுமொத்த இந்திய மீடியாவும் செய்திகளை வெளியிட்டது. மேலும் இவர்கள் இருவரது திருமணத்திற்கும் பிரபாஸ் வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை எனவும் சொல்லப்பட்டது. ஆனாலும் அனுஷ்கா மற்றும் பிரபாஸ் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக தெலுங்கு மீடியாக்கள் செய்திகள் எழுத ஆரம்பித்தன.

பாகுபலி திரைப்படம் ரிலீஸ் ஆகி பல வருடங்கள் ஆகியும், இன்றுவரை தெலுங்கு மீடியாக்கள் இவர்கள் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பை தொடர்வதாக சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அனுஷ்கா மற்றும் பிரபாஸ் தரப்பிலிருந்து இதுவரை இது போன்ற செய்திகளுக்கு எந்த பதிலும் கொடுக்கப்படவில்லை.

Also Read:மனைவி இருக்கும் போதே நடிகைக்கு தாலி கட்டிய வாரிசு நடிகர்.. நான்கே மாதத்தில் முடிவு கட்டிய அப்பா!

Trending News