Rajini: கடந்த சில நாட்களாகவே சூப்பர் ஸ்டார் பற்றிய பேச்சு தான் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கலைஞர் புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்ற ரஜினி பல விஷயங்கள் பற்றி சுவாரசியமாக பேசினார்.
ஆனால் பழைய மாணவர்கள் என்று அவர் குறிப்பிட்ட சொன்ன விஷயம்தான் மீடியாவை அதிர வைத்துள்ளது. இதற்கு அமைச்சர் துரைமுருகன் தக்க பதிலடியும் கொடுத்தார். இதனால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. ஆனால் ரஜினியும் அவர் என்னுடைய நண்பர். இதனால் எனக்கு வருத்தம் இல்லை என பேச்சை அத்தோடு முடித்து விட்டார்.
ஆனாலும் இந்த விஷயத்தை அரசியல் பிரபலங்கள் விடுவதாக இல்லை. இன்னும் எண்ணெய் ஊற்றி அந்த தீயை வளர்த்து வருகிறது சோசியல் மீடியா. மேலும் ஆளும் கட்சிக்குள் பல நாட்களாக இருந்த ஒரு கருத்தை தான் போற போக்கில் தலைவர் சொல்லிவிட்டார் என்ற பேச்சும் ஓடிக்கொண்டிருக்கிறது.
தலைவரின் மறுபக்கம்
எது எப்படியோ தலைவரை வைத்து இன்று கிடையாது பல வருடங்களாகவே அரசியல் நடக்கிறது என்பதுதான் உண்மை. வாஜ்பாய் முதல் தற்போது மோடி வரை பலரும் ரஜினியை தங்கள் பக்கம் இழுக்க பார்த்ததும் மறுக்க முடியாத வரலாறு.
ஆனால் சூப்பர் ஸ்டாரோ அனைத்து அரசியல் பிரபலங்களுடன் இணக்கமான ஒரு நட்பை வைத்துள்ளார். யாருடனும் அவருக்கு நீண்ட நாள் பகையோ முரண்பாடோ கிடையாது. மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர்.
தமிழக அரசியல் வரலாற்றை கொஞ்சம் திரும்பி பார்த்தால் அவர் செய்த சம்பவங்கள் புரியும். ஜெயலலிதாவை எதிர்த்து பேசியதும் உண்டு அவரை தைரிய லட்சுமி என பாராட்டியதும் உண்டு.
ஆனால் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு ஒதுங்கியதாலேயே அவர் பல விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார். அதைத் தாண்டி அரசியலோ சினிமாவோ தலைவரின் இடம் என்றுமே உயரம் தான். இதைத்தான் அவருடைய ரசிகர்கள் இப்போது சர்ச்சைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கமெண்ட் செய்து வருகின்றனர்.