ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அட்லீயை முந்தும் லோகேஷ்.. தலைவர்-171 இல் இணையும் பாலிவுட் நடிகர்

Thalaivar 171: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இது தொட்டதெல்லாம் துலங்கும் காலம் போல் தெரிகிறது. அண்ணாத்தே படத்திற்கு பிறகு கொஞ்சம் டல் அடித்த சூப்பர் ஸ்டார், கரெக்டாக நெல்சனின் கதையை லாக் பண்ணி சூப்பர் ஹிட் கொடுத்தார். அதைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ரெடி ஆகிக் கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து வெற்றிகளை மட்டுமே பார்த்து வந்த லோகேஷ் கனகராஜுக்கு லியோ படம் சற்று சருக்களை கொடுத்து இருக்கிறது. இதனால் தலைவர் 171 படத்தை ரொம்பவும் கவனமாக எடுக்க முடிவு செய்திருக்கிறார் லோகேஷ். லோகேஷ் கனகராஜின் படங்களுக்கு மல்டி ஸ்டார் கூட்டணி தான் இதுவரை பக்கபலமாக இருந்து வந்தது. அதே மல்டி ஸ்டார் கூட்டணி இப்போது நெகட்டிவ் ஆக மாறி இருக்கிறது.

Also Read:மொத்தமும் நான் செஞ்ச தப்பு.. லோகேஷ் வெளிப்படையா சொன்ன அதிர்ச்சி தகவல்

இருந்தாலும் தலைவர் 171 படத்தில் ரொம்பவும் தைரியமாக மீண்டும் ஒரு மல்டி ஸ்டார் கூட்டணியை உருவாக்க இருக்கிறார் லோகேஷ். லோகேஷ் கனகராஜ் தற்போது ஸ்கிரிப்ட் ரைட்டிங் தொடங்கி விட்டார். இதுவரை அவருடைய படங்களில் திரைக்கதை எழுதுவதில் பயணித்த ரத்ன குமார் இந்த முறை அவருடன் கைகோர்க்கவில்லை. மற்ற இயக்குனர்களை வைத்து தான் கதையை ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறார்.

முக்கிய நடிகருக்கு வலை வீசும் லோகேஷ்

திரைக்கதை எழுதுவதோடு சேர்த்து நட்சத்திரங்களின் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஷாருக்கானின் ரா 1 படத்தில் ரஜினி கேமியோ ரோல் பண்ணியது குறிப்பிடத்தக்கது. இதனால் கண்டிப்பாக ஷாருக்கான் இந்த படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜவான் படத்திற்கு பிறகு இயக்குனர் அட்லி, விஜய் மற்றும் ஷாருக்கான் வைத்து படம் பண்ணுவதாக சொல்லி இருந்தார். லோகேஷ் கனகராஜ் இந்த விஷயத்தில் முந்தி விடுவார் போல் தெரிகிறது. ரஜினிகாந்த் படத்தில் ஷாருக்கான் இணைந்து நடித்தால் கண்டிப்பாக மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெரும். ஏற்கனவே ஷாருக்கான் கமலஹாசன் உடன் இணைந்து ஹேராம் படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

Also Read:24 வருடமாக டாப் கலெக்ஷனில் அசைக்க முடியாத இடத்தில் ரஜினி.. வசூலில் அடித்து நொறுக்கிய 4 படங்கள்

Trending News