ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ஓவர் அல்டாப் காட்டிய நயன், சாட்டையை சுழற்றிய ஹீரோ.. இதெல்லாம் தேவையா அம்மணி?

Actress Nayanthara: தவளை தன் வாயால் கெடும் என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள். அது நடிகை நயன்தாராவுக்கு ரொம்பவே பொருந்தும். ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்ள மாட்டாரா என காத்திருக்கும் போது, வாண்டடாக கண்டன்டு கொடுத்து வலையில் சிக்குவார் நயன். அப்படி ஒரு பெரிய ஹீரோவிடம் வம்பு இழுத்து விட்டு, இப்போது புலம்பிக் கொண்டிருக்கிறார்.

சில நேரத்துல நம்ம யோசிக்காம செய்ற விஷயம் செஞ்சு முடிச்ச பிறகு பெரிய அளவுக்கான பின் விளைவை ஏற்படுத்தும். சமீப காலமாக தன்னை ஓவர் மெச்சூரிட்டி இருக்கும் பெண்ணாக காட்டிக் கொள்ளும் நயன்தாரா அதிகமாக பேசுவது கிடையாது. அவர் பேசாமல் இருப்பதற்கு அவருடைய புத்திசாலித்தனம் தான் காரணம் என்று சொல்ல முடியாது. வாயை திறந்தாலே ஏடாகூடமாக பேசி விடுவோம் என்பது அவருக்கே தெரிகிறது.

நயன்தாரா என்றாலே வருஷத்துக்கு ஒரு சர்ச்சை என்று அவருடைய கணக்கில் சேர்ந்து விட்டது. அவரை சுற்றி பேசப்படும் சர்ச்சை கருத்துக்களை பற்றி விளக்க வேண்டும் என்றால் ஒரு நாள் பத்தாது. இதில் முக்கியமாக சொல்ல வேண்டிய விஷயம் நயன்தாரா எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் பரவாயில்லை, அவருடன் சேர்ந்து ஒரு படம் கூட நடிக்க மாட்டேன் என கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக உறுதியாக இருக்கும் முன்னணி ஹீரோவின் ஆதங்கம் தான்.

Also Read:ஒரு டஜனுக்கு மேல் 90ஸ் ஹீரோயின்களை பாலிவுட்டில் நடிக்க வைத்த ஒரே நடிகர்.. உருகி உருகி காதலித்த ஸ்ரீதேவி

நயன்தாராவின் சினிமா கேரியரில் அவர் பண்ணிய முக்கியமான கேரக்டர்களில் நானும் ரவுடிதான் பட காதம்பரி கேரக்டரும் ஒன்று. இதற்காக அந்த வருடத்திற்கான சிறந்த நடிகை விருதை, சைமா விருது அமைப்பு கொடுத்தது. அந்த விருதை நயன்தாராவுக்கு வழங்குவதற்காக தெலுங்கு சினிமா உலகின் முன்னணி ஹீரோவான அல்லு அர்ஜுனும் மேடைக்கு வந்து விட்டார். அவரை தொடர்ந்து நயன்தாராவும் விருதை பெற்றுக் கொள்வதற்காக மேடை ஏறினார்.

சாட்டையை சுழற்றிய ஹீரோ

மேடை ஏறியதும் நயன்தாரா திடீரென மைக்கை வாங்கி இந்த விருதை படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் இருந்து வாங்க விரும்புகிறேன் என சொல்லி அவரை மேடைக்கு அழைத்தார். விக்கியும் நயன்தாராவுக்கு அந்த விருதை கொடுத்தார். இந்த சம்பவம் எல்லாம் நடக்கும் பொழுது அல்லு அர்ஜுன் மேடை மீதே நின்று சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தார் இந்த விழா ஒளிபரப்பப்பட்டதிலிருந்து சில வாரங்களுக்கு அல்லு அர்ஜுன் உடைய ரசிகர்கள் நயன்தாராவை வறுத்தெடுத்து விட்டார்கள்.

சம்பவத்திற்கு பிறகு அல்லு அர்ஜுன் இனி நயன்தாராவுடன் நடிப்பதில்லை என்ற முடிவையும் எடுத்துவிட்டார். நானும் ரவுடிதான் பட சமயத்தில் நயன், விக்னேஷ் சிவனை உருகி உருகி காதலிக்க ஆரம்பித்தார். அந்த காதலின் ஆழத்தை காட்டுவதற்காக விக்னேஷ் சிவனை மேடைக்கு அழைத்து மற்றவர்களின் வெறுப்பை சம்பாதித்து கொண்டார். கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு மேலாகியும் அல்லு அர்ஜுன் நயன்தாராவுக்கு வாய்ப்பு கொடுப்பதாய் இல்லை.

Also Read:எனக்கும் ஸ்ரீதேவிக்கும் இடையே இருந்த அந்த உறவு.. நடிகையின் மரணத்திற்குப் பிறகு மனம் திறந்த கமல்

Trending News