திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

அரசியலில் வடிவேலுவை மிஞ்சும் சூரி.. உதயநிதியின் கூட்டணியை வெளிச்சம் போட்டு காட்டிய ப்ளூ சட்டை

Blue Sattai Maran : காமெடி நடிகர்கள் இப்போது ஹீரோவாக படையெடுத்து வரும் நிலையில் அரசியலிலும் களம் காண ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் வைகைப்புயல் வடிவேலு திமுகவின் பிரச்சாரங்களில் நகைச்சுவையான பேச்சால் ஆதரவை திரட்டினார். ஒருபுறம் திமுகவுக்கு எதிராக கேப்டன் விஜயகாந்த் போட்டியிட்டார்.

அந்த சமயத்தில் வடிவேலு மற்றும் விஜயகாந்த் இடையே பிரச்சனை ஏற்பட்டு இருந்தது. இதன் காரணமாக மேடையிலேயே விஜயகாந்த்தை கிண்டல் செய்து வடிவேலு பிரச்சாரம் செய்தார். அப்போது இந்த சம்பவம் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்போது வடிவேலுவையே மிஞ்சி விடுவார் போல சூரி.

அதாவது ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில் உதயநிதியுடன் நடிப்பது மற்றும் அவருடைய கட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது என வடிவேலு ரூட்டில் சூரி பயணித்து வருகிறார். உதயநிதியின் சரவணன் இருக்க பயமேன், பொதுவாக என் மனசு தங்கம், இப்படை வெல்லும் படங்களில் சூரி இணைந்து நடித்திருந்தார்.

Also Read : 5 அக்கட தேச நடிகர்களையும் வளர்த்துவிட்ட விஜயகாந்த்.. உச்சாணி கொம்பில் தூக்கிவிட்டு அழகு பார்த்த கேப்டன்

இதைத்தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனையின் அருகே அம்மன் கேன்டீன் ஒன்றை திமுக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கையால் திறந்தார். மேலும் இந்த முறை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பிஜேபியின் இருக்கையில் உதயநிதி அருகே சூரிக்கு இடம் தரப்பட்டுள்ளது.

அந்த வகையில் மதுரைக்காரராக வடிவேலுவை இப்போது சூரி ஓவர்டேக் செய்யும் அளவுக்கு நடந்து கொண்டிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு சார்பாக சூரி பிரச்சாரம் செய்வார். சில ஆண்டுகளில் மதுரை எம்எல்ஏ சீட்டு வர இப்போதே சூரி காய் நகர்த்தி வருவதாக அரசியல் சார்ந்த நிபுணர்கள் சொல்வதாக ப்ளூ சட்டை ஒரு பதிவு போட்டு அதகளம் செய்துள்ளார்.

Blue-sattai-maran
Blue-sattai-maran

Also Read : தனுஷ், சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்ட சிக்கல்.. செக் வைத்த உதயநிதி

Trending News