ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

புகைப்படத்துடன் பார்த்திபன் போட்ட ட்விஸ்ட் ஆன பதிவு.. அனல் பறக்க ரெடியாகும் பார்ட் 2

இயக்குனர் மற்றும் நடிகருமான பார்த்திபன் வித்யாசமான கதைகள் அத்துடன் படங்களை எடுக்க கூடியவர். இவருடைய படங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து புதுவிதமான முயற்சிகளை கையாண்டு வருகிறார். அந்த வகையில் இரவின் நிழல் என்ற சிங்கிள் ஷார்ட் படத்தை எடுத்திருந்தார்.

மேலும் இந்த படத்திற்காக ஆஸ்கர் விருது எதிர்பார்த்தார். ஆனால் விருது கிடைக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் இடமிருந்து பாராட்டுக்கள் கிடைத்தது. ஒரு சிலர் இரவின் நிழல் படத்தையும் விமர்சனம் செய்திருந்தார்கள். தற்போது பார்த்திபன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Also Read : மூன்றெழுத்து நடிகரால் பாழாய் போன பார்த்திபனின் கனவு.. மேடையில் வருத்தப்பட்டு பேசிய பார்த்திபன்

அதாவது ஒரு படத்திற்காக டப்பிங் பேசும் புகைப்படத்தை வெளியிட்டு பார்ட் 2 என்று பதிவிட்டுள்ளார். அதாவது பார்த்திபன் நடிப்பில் வெளியான படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. அதற்காகத் தான் அவர் டப்பிங் பேசி உள்ளார். அதன்படி சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ வெளியானது.

பொன்னியின் செல்வன் படத்தில் பார்த்திபன் சின்ன பழுவேட்டராக நடித்திருந்தார். இப்போது இரண்டாம் பாகத்திற்காக பொன்னியின் செல்வன் படத்திற்கு தான் பார்த்திபன் டப்பிங் பேசி உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது. மேலும் முதல் பாகமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Also Read : ப்ளூ சட்டை மாறனுக்கு சரியான பதிலடி கொடுத்த பார்த்திபன்.. விடாமல் துரத்தும் சண்டை

அதுமட்டுமின்றி வசூலையும் வாரி குவித்து. இப்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு நிலவி வருகிறது. அதுமட்டுமின்றி முதல் படத்தின் வரவேற்பு காரணமாக படத்தில் சில மாறுதல்களை மணிரத்தினம் மேற்கொண்டுள்ளார். ஆகையால் படம் வேற லெவலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Parthiban-cinemapettai

Also Read : 2022ஆம் ஆண்டு வெளியான ஐந்து ‘A’ சர்டிபிகேட் படங்கள்.. சென்சார் போர்டை குஜால் ஆக்கிய பார்த்திபன்

Trending News