திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சிவகார்த்திகேயனின் தோல்வியடைந்த படங்கள்.. அடிமாட்டு ரேஞ்சுக்கு அடிச்சு புடிச்சு வாங்கும் டிவி சேனல்கள்.!

நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகர்களில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தவர். இதற்கு இவருடைய கடின உழைப்பு தான் மிக முக்கிய காரணம். ஒரு ஹீரோவாக வெள்ளித்திரையில் கால் பதித்த இவர் இப்போது பாடல் ஆசிரியராகவும், பாடகராகவும், தயாரிப்பாளராகவும் தன் திறமையை வளர்த்துக் கொண்டார்,

ஆரம்ப காலங்களில் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்த இவரது சினிமா வாழ்க்கையில், இடையில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டது. சீமராஜா பட தோல்விக்கு பிறகு இவருடைய சினிமா வாழ்க்கையே கேள்விக்குறியானது. அதன் பின்னர் இவர் நடித்த நம்ம வீட்டு பிள்ளை, டாக்டர் போன்ற படங்கள் மிகப்பெரிய ஹிட் படங்கள் ஆகின.

Also Read: சிவகார்த்திகேயன் தவறவிட்ட தேசிய விருது வாங்கிய படம்.

அடுத்தடுத்து சிவகார்த்திகேயனுக்கு இனி ஏறுமுகம் தான் என சினிமா வட்டாரங்களில் பேசிக்கொண்டனர். ஆனால் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய அடியாக அமைந்தது பிரின்ஸ் திரைப்படம். இந்த படம் கடந்த தீபாவளியன்று ரிலீஸ் ஆனது. ஆனால் இந்த படம் மிகப்பெரிய மோசமான தோல்வியை சந்திக்கும் என அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்.

பிரின்ஸ் திரைப்படத்திற்கு பிறகு சிவா, மாவீரன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்குகிறார். விருமன் திரைப்படத்திற்கு பிறகு அதிதி சங்கர் சிவகார்திகேயனின் மாவீரன் படத்தில் இணைந்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடிக்கிறார்.

Also Read: 2022-ல் பரபரப்பை கிளப்பி மொக்கை வாங்கிய 5 படங்கள்.. அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட தி லெஜன்ட்

இந்த படத்தின் படப்பிடிப்புகள் பயங்கர பிசியாக நடைபெற்று வருகின்றன. இந்த படம் 2023 ஆம் ஆண்டு ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வரும் 24ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே இந்த படத்தை சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது அதிர்ச்சியாக உள்ளது.

இதற்கு காரணம் சிவகார்த்தியன் படம் சினிமாவில் வெற்றி பெறுகிறதோ இல்லையோ டிவியின் டிஆர்பியில் சிவகார்த்திகேயன் படம் தான் முதலிடத்தில் இருக்கிறது.இதனால் மாவீரன் படத்தை இப்பொழுதே வாங்கியிருக்கிறது சன் டிவி. டிவி. சின்னத்திரையில் இருந்து வந்த சிவகார்த்திகேயன் டிவியிலேயே வெற்றி பெறுகிறார் என்று கலாய்த்து வருகிறார்கள் பிரபலங்கள்.

Also Read: சிவகார்த்திகேயனின் ஆட்டத்தை கூண்டோடு ஒழிக்க தனுஷ் செய்த வேலை.. உடந்தையாக இருந்த ப்ளூ சட்டை மாறன்

Trending News