சனிக்கிழமை, நவம்பர் 16, 2024

300 படங்களில் நடித்தும் ஏவிஎம் நிறுவனத்தை வெறுத்த ஜாம்பவான்.. கற்பூர புத்தியுடன் செயல் பட்ட சிவாஜி

உச்சத்தில் இருந்த நடிகர் கிட்டத்தட்ட 300 படங்களில் நடித்தும் ஏவிஎம் நிறுவனத்திற்கு ஒரே ஒரு படம் மட்டும் வாய்ப்பு கொடுத்துள்ளார். அதற்குப் பின்னர் இணையவில்லை என்பது ஒருபுறமிருந்தாலும் கற்பூர புத்தி போல் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார் சிவாஜி.

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களாக இருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அந்தக் காலத்தில் சிவாஜி கணேசனை மட்டும் வைத்து ஏகப்பட்ட படங்கள் தயாரித்து ஹிட் கொடுத்தவர்கள் பலர்.

அதிலும் 10 படங்களுக்கு மேல் சிவாஜி ஏவிஎம் தயாரிப்பில் நடித்துள்ளார். சிவாஜி கணேசன், கமலஹாசன் போன்ற அற்புதமான நடிகர்களை அறிமுகப்படுத்தியதும் இந்நிறுவனமே. அத்தகைய பெருமைக்குரிய ஏவிஎம் நிறுவனம் 1940 ஆம் ஆண்டில் இருந்து பல படங்களை தயாரித்து, கடந்த 65 ஆண்டுகளுக்கு மேலாக கோலிவுட்டின் அடையாளமாகவே மாறிவிட்டது.

Also Read: தளபதி விஜய்யை மொத்தமாக வச்சு செய்த ஏவிஎம் வாரிசு

ஏவி மெய்யப்ப செட்டியார் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த தயாரிப்பு நிறுவனம் நான்கு தலைமுறைகளை கடந்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களை வைத்து ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறது.

ஆனால் எம்ஜிஆர் வாழ்க்கையில் ஒரே ஒரு படத்தில்தான் ஏவிஎம் தயாரிப்பில் நடித்திருக்கிறார். 300 படங்கள் பண்ணியும் ஒரு படம் மட்டுமே வாய்ப்பு கொடுத்திருக்கிறார் எம்ஜிஆர். அந்த ஒரு படம் தான் 1965 ஆம் ஆண்டு திருலோகச்சந்தர் இயக்கத்தில் எம்ஜிஆர், சரோஜாதேவி நடிப்பில் வெளியான ‘அன்பே வா’ திரைப்படம்.

Also Read: ஏவிஎம் நிறுவனத்தை ஒரேடியாக சாய்த்த நடிகர்கள்

இந்தப்படத்தில் எம்ஜிஆருடன் நாகேஷ், அசோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் ஏவிஎம் தயாரித்த நிறுவனத்திற்கு எம்ஜிஆர் தன்னுடைய அடுத்தடுத்த படங்களை தயாரிப்பதற்கான வாய்ப்பை கொடுக்க மறுத்திருக்கிறார்.

ஆனால் சிவாஜியின் பெரும்பாலான படங்களை ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்கும். இப்படி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தும் ஏவிஎம் தயாரித்த நிறுவனத்திற்கு வாய்ப்புக் கொடுக்க எம்ஜிஆர் மறுப்பதற்கு என்ன காரணம் என்பதை சினிமா ரசிகர்கள் தோண்டித் துருவிக் கொண்டிருக்கின்றனர்.

Also Read: 4 தலைமுறைகளாக நம்பர் ஒன்னில் இருக்கும் ஏவிஎம்

- Advertisement -spot_img

Trending News