லியோவுக்கு கலாநிதி கொடுத்த கெடு.. அனிருத் ஐடியாவால் முழிக்கும் விஜய்

Leo Movie: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் பின்னணி வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது. இந்த சூழலில் விஜய்யின் படங்களில் எப்போதுமே ஆடியோ லான்ச் பங்க்ஷன் மிகவும் பிரமாண்டமாக நடைபெறும். ரசிகர்களும் அதை எதிர்நோக்கி தான் காத்திருப்பார்கள்.

இந்த சூழலில் லியோ படத்தின் ஆடியோ லாஞ்சை மலேசியாவில் நடந்த படக்குழு முடிவு செய்து வைத்திருந்தது. மேலும் படம் ரிலீஸ் தேதி நெருங்குவதால் அடுத்த மாதம் ஆடியோ லான்ச் பங்க்ஷனை நடத்த வேண்டும் என முன்னேற்பாடுகளை தொடங்கினர். ஆனால் இப்போது அதில் பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

Also Read : லியோ ஆடியோ லான்ச் இடத்தையும் நேரத்தையும் லாக் செய்த படக்குழு.. மாஸ்டர் மைண்டாக செயல்படும் நபர்

அதாவது கலாநிதி மாறனின் சன் டிவி தான் லியோ படத்தின் ஆடியோ லான்ச் ரைட்சை வாங்கியுள்ளது. ஆகையால் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை நாள் என்பதால் அன்று லியோ ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய திட்டம் தீட்டி உள்ளனர்.

ஆகையால் அக்டோபர் 2 ஒளிபரப்ப வேண்டும் என்பதால் அதற்கு முன்னதாகவே ஆடியோ பங்ஷனை நடத்தி விட வேண்டும் என சன் டிவி லியோ டீமுக்கு கெடு கொடுத்திருக்கிறது. ஆனால் இன்னும் மலேசியாவில் லியோ ஆடியோ லான்ச் நடத்த இடம் கிடைக்கவில்லை. இதில் அனிருத் ஒரு ஐடியா கொடுத்துள்ளார்.

Also Read : மகள் மார்க்கெட்ல விலை போகலனு தெரிந்து தூக்கி விடும் அப்பா.. இயக்குனர் அவதாரம் எடுக்கும் லியோ பட வில்லன்

அதாவது ஏற்கனவே மலேசியாவில் இசை நிகழ்ச்சியை அனிருத் நடத்தி உள்ளார். அந்த ஆடிட்டோரியத்தில் லியோ படத்தின் இசை நிகழ்ச்சியையும் நடத்தலாம் என்று ரெக்கமண்ட் செய்து இருக்கிறார் அனிருத். செப்டம்பர் 23 அல்லது 30 தேதிகளில் அங்கு ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை நடத்தலாம் என படக்குழு அணுகி உள்ளது.

ஆனால் அந்த தேதிகளில் அந்த ஆடிட்டோரியம் ஃப்ரீயாக இல்லையாம். இப்பொழுது அனிருத் ரெக்கமண்ட் செய்த ஆடிட்டோரியமும் எடுபடவில்லை. மேலும் சன் பிக்சர்ஸ் இந்த தேதிக்குள் லியோ இசை வெளியீட்டு விழாவை நடத்தி விட வேண்டும் என்று கெடு கொடுத்துள்ளதால் தமிழ்நாட்டில் தான் இந்நிகழ்ச்சி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : லியோ கிளைமாக்ஸ்ஸில் அதிரடியான சஸ்பென்ஸ் வைக்கும் லோகேஷ்.. 1000 கோடி வசூலை பார்க்காமல் விடமாட்டேன்