Vijay-Trisha: விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததில் இருந்து ஏகப்பட்ட விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். ஆனால் பொது வாழ்வில் இறங்கிவிட்டால் இது போன்ற விஷயங்களை சமாளித்து தான் ஆக வேண்டும்.
இது தெரிந்ததாலேயே அவர் அமைதியை கடைப்பிடித்து வருகிறார் ஆனாலும் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் அவருக்கு எதிராகவே முடிகிறது ஏனென்றால் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கோட் படத்தில் பல அரசியல் சார்ந்த குறியீடுகள் இருந்தது.
அதாவது விஜய் வரும் காரில் CM 2026 என தொடங்கி ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்ட த்ரிஷாவின் உடை அவர் கட்சியின் கொடி கலரில் இருந்தது வரை அனைத்தும் சர்ச்சை தான். இதை தயாரிப்பாளர் கே ராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அரசியலுக்கு வருகிறாரா திரிஷா.?
அதாவது த்ரிஷா தான் விஜய் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர். அதனாலேயே அவருக்கு சிவப்பு மஞ்சள் நிறத்தில் புடவையை அணிந்து கொண்டு ஆட வைத்துள்ளனர். மேலும் கோட் படத்தில் அவருடைய கதாபாத்திர பெயர் காந்தி.
அந்த பெயரை வைத்துக் கொள்ளும் அளவுக்கு அவர் என்ன ஒழுக்கமானவரா? காந்தி மகான் ஒழுக்க நெறிகளை கடைப்பிடித்தவர். அவர் பெயரை எப்படி வைத்துக் கொள்ளலாம். இது மிகப்பெரும் தவறு இதை வன்மையாக கண்டிக்கிறேன் என தன் கருத்தை தெரிவித்துள்ளார்.
இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தாலும் விஜய் ரசிகர்கள் கொதித்துப் போய் இருக்கின்றனர். எல்லாம் விஜய் மேல் இருக்கும் வன்மம் தான். ஆனால் இதெல்லாம் அவரை எதுவும் செய்யாது. எங்கள் சப்போர்ட் அவருக்கு உண்டு என ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.