சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

இதுவும் சனாதனம் தான்.. விஷாலை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய தயாரிப்பாளர்

Actor Vishal: விஷாலுக்கும் சர்ச்சைக்கும் அப்படி ஒரு பொருத்தம் இருக்கிறது. ஏதாவது ஒரு விஷயத்தை பேசி வம்பை விலைக்கு வாங்கும் இவரை தயாரிப்பாளர் ஒருவர் மேடையிலேயே லெப்ட் அண்ட் ரைட் வாங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது மார்க் ஆண்டனி பட வெற்றியால் பூரித்துப் போய் இருக்கும் விஷால் அண்மையில் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை வெளியிட்டு இருந்தார். அதாவது நான்கு, ஐந்து கோடி வைத்திருக்கும் சிறு தயாரிப்பாளர்கள் சினிமாவுக்குள் வரவேண்டாம்.

Also read: வந்தால் பல கோடி இல்லனா தெருக்கோடி.. விஷாலை நம்பி மோசம் போனதால் சட்டையை பிடித்த தயாரிப்பாளர்

அந்த காசை குழந்தைகள் பெயரில் டெபாசிட் செய்யுங்கள் அல்லது நிலம் வாங்கி போடுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இது கடும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் எனக்கு எண்டே கிடையாது பட தயாரிப்பாளர் கார்த்திக் வெங்கட்ராமன் விஷால் மீதான தன்னுடைய கோபத்தை வெளிக்காட்டி இருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது, பெரிய போட் வைத்திருப்பவர்கள் நிறைய மீனை பிடிப்பார்கள். அதே போன்று சிறிய போட் வைத்திருப்பவர்கள் அதற்கு ஏற்ற மீன்களை பிடிப்பார்கள். இன்று சிறு படகை வைத்திருக்கும் நான் ஒரு நாள் பெரிய படகை வாங்குவேன்.

Also read: லட்சுமிகரமான நடிகைக்கும் விஷாலுக்கும் உள்ள உறவு.. விளக்கம் கொடுத்த மார்க் ஆண்டனி

அப்படித்தான் சினிமாவும், யார் படங்களை எடுக்கணும் எடுக்க கூடாது என்று சொல்ல எவருக்கும் உரிமை கிடையாது. இதுவும் ஒரு வகையான சனாதனம் தான் என்று விஷாலுக்கு பதிலடி தரும் விதமாக அவர் தன்னுடைய கருத்தை காட்டமாக பதிவு செய்துள்ளார்.

மேலும் பேசிய அவர் நான் ஒரு வழக்கறிஞராக இருந்தாலும் சினிமா மீதான என்னுடைய ஆர்வத்தில் தான் இப்படத்தை தயாரித்திருக்கிறேன். இது என்னுடைய ஏழு வருட தவம் என்றும் தெரிவித்துள்ளார். அந்த வகையில் விஷாலை இவர் வெளுத்து வாங்கி இருப்பது படத்திற்கான ப்ரமோஷனாகவும் மாறி இருக்கிறது.

Also read: எவ்வளவு அடி வாங்கினாலும் தொடர்ந்து நடிக்கும் 5 ஹீரோக்கள்.. விஷாலுக்கு பயத்தை காட்டிய எஸ் ஜே சூர்யா

Trending News