நடிகர் சிம்பு நீண்ட பிரேக்கிற்கு பிறகு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கலக்கலான ஒரு கம்பேக் கொடுத்து இன்று தமிழ் சினிமாவில் பட்டையை கிளப்பி வருகிறார். விட்டதை பிடிக்க கடும் முயற்சி செய்து கொண்டிருக்கும் சிம்பு சில வருடங்களுக்கு முன்னால் தனக்கு இருந்த மாஸ் மற்றும் பெயரை தானாகவே கெடுத்துக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் பட தயாரிப்பாளர்களுக்கும் , இயக்குனர்களுக்கும் மிகப்பெரிய பிரச்சனையாகவே பார்க்கப்பட்டார்.
படப்பிடிப்புக்கு சரியாக வராமல் இருப்பது, படத்தை ஒப்புக்கொண்டு பின்னர் நடிக்க மாட்டேன் என்று விலகி விடுவது, திடீரென காணாமல் போய்விடுவது என ஏகப்பட்ட அலப்பறைகளை செய்து கொண்டிருந்தார் சிம்பு. ஒரு கட்டத்தில் அவருடைய வீட்டிலேயே படப்பிடிப்பு நடத்தும் அளவுக்கு தயாரிப்பாளர்களை நொந்து போக செய்தார். இதனால் கோலிவுட்டில் சிம்புவுக்கு ரெட் கார்ட் கொடுத்து சினிமாவை விட்டு வெளியே தள்ளுவது என்ற முடிவு கூட எடுக்கப்பட்டது.
Also Read:நண்பனின் இறப்பிற்கு வராத அஜித்.. கல்நெஞ்சம் படைத்தவரா? ஏகே தரப்பில் கொடுத்த பதிலடி
இப்படி சிம்பு பல சர்ச்சையான பஞ்சாயத்துகளை செய்து கொண்டிருக்கும் வேளையில் அவரிடம் மாட்டிய ஒரு தயாரிப்பாளர் மிகப்பெரிய நஷ்டத்திற்கு உள்ளாகி சினிமாவை விட்டு விலகி இருக்கிறார். இந்த தகவல் தான் தற்போது பயங்கர வைரலாகி வருகிறது. நிக் சினிமா ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் சக்கரவர்த்தி தான் சிம்புவால் சினிமாவை விட்டு ஒதுங்கிப் போன அந்த தயாரிப்பாளர்.
சில தினங்களுக்கு முன் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி புற்றுநோயால் காலமானார். இவர் கிட்டதட்ட ஏழு படங்களுக்கு மேல் நடிகர் அஜித்குமாரை வைத்து தயாரித்து இருக்கிறார். சக்கரவர்த்தி பொருளாதார நெருக்கடியால் சினிமாவை விட்டு ஒதுங்கிய போது அது முழுக்க முழுக்க அஜித்தினால் தான் நடந்தது. அவரின் ஜி மற்றும் ஆஞ்சநேயா படங்கள் தொடர் தோல்வியை அடைந்ததால் தான் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு சக்கரவர்த்தி சினிமாவை விட்டு விலகினார் என்ற தவறான தகவல் உலவி வந்தது.
Also Read:நெகட்டிவ் கேரக்டரிலும் முத்திரை பதித்த அஜித்தின் 5 படங்கள்.. கேரியரையே மாற்றிய மோசமான வில்லத்தனம்
ஆனால் உண்மையில் ஜி மற்றும் ஆஞ்சநேயா படங்கள் பொருளாதார தோல்வியை சந்தித்த பிறகு நடிகர் அஜித்குமார் வரலாறு திரைப்படத்தில் நடித்துக் கொடுத்து அந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்ததன் மூலம் சக்கரவர்த்தியின் அத்தனை கடன்களும் அடைக்கப்பட்டிருக்கிறது. அதன்பின்னர் இருவரும் சுமூகமாக பேசி தான் பிரிந்து இருக்கிறார்கள். இந்த சம்பவத்திற்கு பிறகு தான் சக்கரவர்த்தி சிம்புவிடம் மாட்டியிருக்கிறார்.
நடிகர் சிம்பு மற்றும் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி இருவரும் வேட்டை மன்னன் என்னும் திரைப்படத்தில் இணைந்திருக்கிறார்கள். அந்த படம் பண்ணிக் கொண்டிருக்கும்போதே நாம் சின்ன பட்ஜெட்டில் இன்னொரு படம் பண்ணி விடுவோம் என்ற ஒரு ஆசையை காட்டி வாலு படத்தை தயாரிக்க வைத்திருக்கிறார் சிம்பு. அந்த படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் வேளையிலேயே போடா போடி திரைப்படத்தில் நடிக்க கிளம்பி விட்டார். இதில் பெரும் நஷ்டத்தை சந்தித்த சக்கரவர்த்தி அதிலிருந்து மீள முடியாமல் தான் சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார்.
Also Read:விடாமுயற்சிக்கு சம்பளத்தை வாரி வழங்கிய லைக்கா.. 2வது இடத்திற்கு முன்னேறிய அஜித்