வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

வாரிசால் தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்.. நடிகரிடம் வைத்த கோரிக்கை

உச்ச நடிகரின் மகள் சமீபத்தில் ஒரு படம் எடுத்து பிளாப் ஆனது. ஆரம்பத்தில் இந்தப் படத்தில் ஒப்பந்தமாகும் போது மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் ஒரு கண்டிஷன் போட்டிருந்தது. அதாவது உச்ச நடிகரை இந்த படத்தில் நடிக்க வைத்தால் உங்கள் படத்தை தயாரிக்கிறோம் என்று செக் வைத்தனர்.

எப்படியோ தனது தந்தையிடம் சம்மதம் வாங்கி படத்தையும் எடுத்து முடித்து விட்டார். கண்டிப்பாக இந்த படம் மிகப்பெரிய லாபத்தை கொடுக்கும் என தயாரிப்பு நிறுவனம் எண்ணி இருந்தது. அதோடு நடிகரின் இளைய மகளுடன் ஒரு படத்தையும் இயக்க தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தம் போட்டுவிட்டது.

ஆனால் மூத்த மகள் இயக்கிய படம் வெளியாகி நெகட்டிவ் விமர்சனம் தான் பெற்றது. அதோடு போட்ட பணத்தையும் எடுக்க முடியாததால் தயாரிப்பு நிறுவனம் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானது. மேலும் சில படங்களை தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் எடுத்து வந்த நிலையில் பட்ஜெட் இல்லாததால் அந்த படமும் தாமதமாக நிற்கிறது.

இந்த சூழலில் நடிகையின் இளைய மகள் தனது படத்திற்கான வேலையை தொடங்க மும்மரம் காட்டி வருகிறாராம். அதற்கான அறிவிப்பையும் விரைவில் வெளியிட வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனத்திடம் உச்சரித்துக் கொண்டிருக்கிறார். இதனால் தயாரிப்பாளர் நடிகரிடம் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறாராம்.

அதாவது இப்போது பெரிய நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறோம். அந்தப் படங்களை ரிலீஸ் செய்து விட்டால் ஓரளவு நல்ல லாபத்தை பெற முடியும். ஆகையால் அந்தப் படங்களின் ரிலீசுக்கு பிறகு இளைய மகள் பட அறிவிப்பை வெளியிடலாம் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஏனென்றால் அதற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியானால் தயாரிப்பு நிறுவனத்திற்கு இப்போது உள்ள பெயர் மொத்தமாக டேமேஜ் ஆகிவிடும். நடிகரும் தயாரிப்பு நிறுவனத்தின் மீது இரக்கப்பட்டு அவர்களது வேண்டுகோளுக்கு சம்மதம் தெரிவித்து உள்ளார்.

Trending News