செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

புயலால அமுங்கி போன பருத்திவீரன் பஞ்சாயத்து.. தயாரிப்பாளரால் வெளிவந்த சிவகுமாரின் சுயரூபம்

Paruthiveeran Issue: கடந்த சில வாரங்களாக பருத்திவீரன் பஞ்சாயத்து சோசியல் மீடியாவில் கொழுந்துவிட்டு எரிந்தது. ஆனால் இடையில் மிக்ஜாம் புயல் வந்து சென்னையை புரட்டிப்போட்டு சென்றது. அந்த கேப்பில் சிவகுமார் குடும்பப் பிரச்சனையும் அப்படியே அமுங்கி போனது.

ஆனால் உண்மையை எவ்வளவு நாளைக்கு மறக்க முடியும் என்ற கதையாக தற்போது மீண்டும் அந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த பிரச்சனையைப் பற்றி முழுவதும் அறிந்த தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் தற்போது சிவகுமாரின் சுயரூபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதாவது இந்த பிரச்சனை நடந்து கொண்டிருந்த சமயத்தில் சிவகுமார் சில விஷயங்களில் நியாயமாக இருந்திருக்கிறார். ஆனால் பல பிரச்சனைகளை கண்டும் காணாமல் தான் இருந்தாராம். அது மட்டுமல்லாமல் ஒரு குறிப்பிட்ட ஏரியாவின் உரிமையை சிவசக்தி பாண்டியன் வாங்க நினைத்திருக்கிறார்.

Also read: பருத்திவீரன் படத்தில் நடிக்க வேண்டியது கார்த்தியே இல்ல.. உண்மையை போட்டு உடைத்த கஞ்சா கருப்பு

ஆனால் அப்போது தலைவராக இருந்த ராமநாராயணன் யாரும் இதை வாங்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாராம். ஏனென்றால் சிவகுமார் போன் செய்து நியாய தர்மத்தின் படி நடந்து கொள்ளுங்கள் என்று கூறினாராம். அதற்கு முக்கிய காரணம் அந்த ஏரியாவின் உரிமை அமீரிடம் இருந்திருக்கிறது.

சிவகுமார் அப்படி சொன்ன பிறகு அனைவரும் ஒதுங்கி போயிருக்கின்றனர். அதன் பிறகு அமீரிடம் இருந்து மொத்த உரிமையையும் ஞானவேல் ராஜா நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. அமீர் மிகுந்த மன வேதனையுடன் தான் அதை கொடுத்ததாக சிவசக்தி பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தில் சூர்யா பல விஷயங்களுக்கு உதவி செய்திருக்கிறார். அதை தொடர்ந்து படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. உடனே சிவக்குமார் தரப்பிலிருந்து கார்த்தியின் அடுத்த இரண்டு படங்களையும் அமீர் இயக்க வேண்டும். சூர்யாவின் கால்ஷீட்டை கூட வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினார்களாம்.

Also read: ஞானவேல் திமிருக்கு காரணமான 3 பேர்.. “கீ” கொடுத்தால் ஆட்டம் போடும் தலையாட்டி பொம்மை

அமீர் நினைத்து இருந்தால் அந்த வாய்ப்பை ஏற்றிருக்கலாம். ஆனால் அவர் அதை வேண்டாம் என்று மறுத்திருக்கிறார். அப்படி என்றால் அவர் அந்த அளவிற்கு காயப்பட்டு இருக்கிறார். அதிலிருந்து இப்போது கூட அவர் வெளிவராமல் தவித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய காயத்திற்கு சிவகுமார் குடும்பம் தான் மருந்து போட வேண்டும் என சிவசக்தி பாண்டியன் உண்மையை உடைத்து பேசியிருக்கிறார்.

Trending News