ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அஜித்துக்கு தீனா படம் எப்படியோ அப்படித்தான் சிம்புவுக்கும் பத்து தல.. கோலிவுட்டில் பெரும் பரபரப்பு கிளப்பிய தயாரிப்பாளர்

ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்த பின் சிம்பு சினிமாவை விட்டு ஒதுங்கி விடுவார் என பலரும் யூகித்த நிலையில், மாநாடு படத்தின் மூலம் தனது செகண்ட் இன்னிங்சை துவங்கி தற்போது கோலிவுட்டில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறார். இந்த மாதம் 30 ஆம் தேதி, சிம்புவின் பத்து தல திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.

சில தினங்களுக்கு முன் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடந்தது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? அடுத்த உலக நாயகன் யார்? என பல சர்ச்சைகள் கிளம்பிக் கொண்டிருக்கையில் அடுத்த தல, சிம்பு தான் என்று பிரபல தயாரிப்பாளர் அடித்து சொல்கிறார்.

Also Read: அஜித்தை பார்த்து ஓரம் கட்டிய சிவகார்த்திகேயன்.. முழு வீச்சில் செக் வைக்கும் மனைவி

இவர் சொல்வதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு தற்போது சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தாலும், அவருக்கு இருக்கும் ரசிகர்களை பார்க்கும்போது அஜித்துக்கு திரளும் ரசிகர்கள் போலவே இருக்கின்றனர்.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தற்போது பிரம்மாண்டமாக சிம்புவின் பத்து தல படத்தை எடுத்து முடித்துள்ளார். இவர் எடுத்த படங்களிலேயே இந்த படம் மிகப்பெரிய அளவில் வந்துள்ளது. படம் நிச்சயம் வெற்றி பெறும் என நம்புகிறார். இவர் ஒரு பேட்டியில் சிம்பு பற்றி பேசும் பொழுது, சிம்பு கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட தம்பி, அவருக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

Also Read: பகிரங்கமாக கௌதம் மேனனிடம் கோரிக்கை வைத்த இளம் சீரியல் நடிகை.. சிம்புவையும் விட்டு வைக்கல

இதனால் தமிழ் சினிமாவில் அஜித்திற்கு அடுத்து, கண்மூடித்தனமாக கலப்படமற்ற ரசிகர்கள் சிம்புவுக்கு தான் இருக்கின்றனர். சினிமாவில் மிகப்பெரிய இடைவெளி எடுத்து படங்கள் நடிக்காமல் இருந்தும், தற்போது பத்து தல படத்திற்கு கிடைத்திருக்கும் ரசிகர்களின் வரவேற்பைப் பார்த்தால் நம்பவே முடியவில்லை.

அந்த அளவிற்கு வெறித்தனமான ரசிகர்களாக இருக்கிறார்கள். அஜித் சாருக்கு எப்படி தீனாவுக்கு முன் தீனாவிற்கு பின் என்று அமைந்ததோ, அதேபோல் சிம்புவுக்கும் பத்து தல படத்திற்கு முன் பத்து தல படத்திற்கு பின் என நிலைமை மாறும். அந்த அளவிற்கு படத்தின் வெற்றி தாறுமாறாக அமையப் போகிறது என்று பெரும் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

Also Read: ஒல்லியான சிம்புவை மறுபடியும் குண்டாக சொன்ன இயக்குனர்.. எரிச்சல் அடைந்து எஸ்டிஆர் செய்த செயல்

Trending News