திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

உங்களுக்கெல்லாம் மன்னிப்பே கிடையாது.. தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு சாபம் விட்ட தயாரிப்பாளர்

Actor Dhanush: தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தங்களுடைய விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டதிலிருந்து ஒரே சலசலப்பு தான். இரண்டு வருடம் பிரிந்து இருந்த இவர்கள் தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளனர்.

அதையடுத்து மீண்டும் இந்த செய்தி சூடு பிடித்துள்ளது. இதில் பல பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் சர்ச்சை பேச்சுகளுக்கு சொந்தக்காரரான தயாரிப்பாளர் ராஜன் தன் கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது, ரஜினிகாந்த் எப்படிப்பட்ட மனிதர்.

அவருடைய மனசை காயப்படுத்தலாமா? விவாகரத்து வேண்டாம் என்று அவர் நிச்சயம் அவர்களை சமாதானப்படுத்தி இருப்பார்.

தனுஷை தாக்கி பேசிய ராஜன்

அப்படி இருந்தும் கூட இவர்கள் தங்கள் முடிவில் உறுதியாக இருக்கிறார்கள். இது நிச்சயம் தவறான முன்னுதாரணம். இவர்களுக்கெல்லாம் மன்னிப்பே கிடையாது.

தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி நினைக்காமல் இருந்தார்கள் என்றால் மக்களின் சாபத்துக்கு ஆளாவார்கள். அதனால் அவர்கள் இருவரும் இணைந்து வாழ வேண்டும்.

பெற்றவர்கள் மனசை நோகடிக்க கூடாது என விளாசி இருக்கிறார். மேலும் தனுஷ் ஒரு மனுஷனா? அப்படி என்ன உனக்கு பெண்களுடன் சகவாசம் வேண்டி இருக்கிறது என சரமாரியாக தாக்கி பேசியுள்ளார்.

இதற்கு ஒரு சிலர் ஆதரவு தெரிவித்தாலும் தனுஷ் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது அநாகரிகம் என்று உங்களுக்கு தெரியாதா? என ராஜனை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Trending News