புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Simbu: சிம்புவை நம்பி பிரயோஜனம் இல்ல.. பெரிய திமிங்கலத்துக்கு தூண்டில் போடும் முதலாளி

Simbu: சிம்பு, கமல் தயாரிப்பில் பிரம்மாண்ட படத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால் இன்னும் அந்த சூட்டிங் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. அதனாலயே இப்போது தக் லைஃப் பக்கம் வண்டியை திருப்பி இருக்கிறார்.

மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில தாமதங்களின் காரணமாக இந்த இருவரும் படத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

அதை அடுத்து சிம்பு இதில் இணைந்துள்ளதை பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சிம்புவால் ரூட்டை மாற்றிய ஐசரி கணேஷ்

இந்நிலையில் சிம்புவுக்காக காத்திருந்த தயாரிப்பாளர் தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதன்படி ஐசரி கணேஷ், சிம்பு இருவருக்கும் இடையே ஒரு பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது.

மேலும் ஐசரி கணேஷ் தயாரிப்பில் வெளிவந்த கடந்த சில படங்கள் எதிர்பாத்த லாபத்தை கொடுக்கவில்லை. அதனாலயே இப்போது அவர்கள் சிறு பட்ஜெட் படங்களை எல்லாம் தயாரிக்க வேண்டாம் என முடிவெடுத்து உள்ளார்களாம்.

அதற்கு பதிலாக ரஜினி, கமல் போன்ற பெரிய ஹீரோக்களிடம் கால் சீட் வாங்கி படம் எடுக்க பிளான் செய்துள்ளனர். விரைவில் அதற்கான நடவடிக்கைகளை ஐசரி கணேஷ் ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அவர் தயாரிப்பில் உருவாக்கி இருக்கும் பிடி சார் வெளிவர இருக்கிறது. ஏற்கனவே இதன் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இந்த படமாவது தங்களுக்கு லாபத்தை கொடுக்கும் என அவர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Trending News