விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் மாஸ்டர். பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையில் வெளியான மாஸ்டர் திரைப்படம் வசூலை வாரி குவித்தது.
ஆனால் லோகேஷ் கனகராஜின் மாநகரம், கைதி போன்ற முந்தைய படங்கள் போல மாஸ்டர் இல்லை எனவும், மாஸ்டர் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.
மேலும் விஜய்யின் கதாபாத்திரத்தை விட விஜய் சேதுபதி நடித்த பவானி கதாபாத்திரம் மற்ற மொழி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. இதனால் தற்போது அவருக்கு மற்ற மொழிகளிலிருந்து பட வாய்ப்புகள் ஏராளமாக குவிந்து வருகின்றன.
இப்படி இருக்கையில் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தில் செய்தது தனக்கு பிடிக்கவில்லை என தயாரிப்பாளர் கே ராஜன் என்பவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளது விஜய் ரசிகர்களை அப்செட்டாக்கி உள்ளது.
ஒரு கல்லூரி பேராசிரியராக வருபவர் எந்நேரமும் குடித்துக் கொண்டிருப்பது போல் அந்த கதாபாத்திரம் இருப்பதால் அதைப் பார்த்து மாணவர்கள் கெட்டுப்போக அதிக வாய்ப்பு இருக்கிறது.
இந்த ஒரு அடிப்படை அறிவு கூட இல்லாமல் எப்படி இப்படி ஒரு கதாபாத்திரத்தை லோகேஷ் கனகராஜ் உருவாக்கினார் என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு மாஸ்டர் படக்குழுவினர் பதில் கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.