ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

தனுஷுடன் கிசுகிசு, திருமணத்திற்கு முன்பே குழந்தை.. தமிழ் சினிமாவில் பெரிய அளவில் ஜொலித்திருக்க வேண்டிய அந்த நடிகை!

Dhanush: சில நடிகைகள் பல வருடங்களாக சினிமாவில் இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க மாட்டார்கள். ஆனால் ஒரு சில நடிகைகள் ஒன்று இரண்டு படங்களிலேயே திரும்பிப் பார்க்க வைத்து விடுவார்கள்.

அப்படி ஒரு நடிகை தான் இவர். அறிமுகமான படம் சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் அதை தொடர்ந்து சில நல்ல ரோல்கள் அவருக்கு கிடைத்தது. கண்டிப்பாக இந்த நடிகை தமிழ் சினிமாவில் பெரிய உச்சத்தை தொடுவார் என பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது.

தனுஷுடன் கிசுகிசு, திருமணத்திற்கு முன்பே குழந்தை

ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை இந்த நடிகை தற்போது இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டார். சிந்து சமவெளி படத்தில் அறிமுகமாகி, பிரபு சாலமனின் மைனா படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகை அமலாபால்.

அதைத் தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி, தெய்வத்திருமகன், தலைவா போன்ற படங்களில் நடித்தார். ஒரு அளவுக்கு வளர்ந்த நடிகை ஆக வந்து கொண்டிருக்கும்போதே இயக்குனர் ஏ எல் விஜய் திருமணம் செய்தார்.

ஒன்று இரண்டு வருடங்களில் திருமண வாழ்க்கை கசந்து போக விவாகரத்து முடிவை எடுத்தார். விவாகரத்துக்கு பிறகு தமிழ் சினிமா அவரை ஆதரிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அது மட்டும் இல்லாமல் திருமணமான பின் அவர் நடித்த விஐபி படம் தனுசு உடன் அவருக்கு நெருங்கிய உறவு இருப்பதாக செய்திகள் எழுவதற்கு காரணமாக அமைந்துவிட்டது.

அது மட்டும் இல்லாமல் விவாகரத்துக்கே தனுஷ் தான் காரணம் என்னும் அளவுக்கு இன்று வரை நம்பப்படுகிறது. தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் பெரிய அளவில் வெற்றி என்று எதுவும் அமலா பாலுக்கு கிடைக்கவில்லை.

அதன் பின்னர் கடந்த வருடம் தன்னுடைய தோழர் ஜகத் தேசாயை திருமணம் செய்யப் போவதாக அறிவித்தார். திருமணம் ஆன ஒரே மாதத்தில் கர்ப்பமாக இருப்பதை அறிவித்து தற்போது அழகான ஆண் குழந்தைக்கு அம்மாவாகி இருக்கிறார் அமலா பால். தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வந்திருக்க வேண்டிய நடிகை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News