வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சம்பாதிப்பதற்கு மட்டும் தான் தமிழ்நாடு.. சென்னையில் இருக்க கூடாது என மகனை தொந்தரவு செய்யும் பொன்னியின் செல்வன் நடிகர்

சினிமாவை பொறுத்த வரைக்கும் பல முன்னணி ஹீரோக்கள் தங்களின் படங்களில் மட்டுமே மொழி உணர்வு, நாட்டுப்பற்று என்று ஓவராக பில்டப் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களுடைய சொந்த வாழ்க்கையை பார்த்தால் தங்களுடைய பிள்ளைகளை கூட வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைத்துக் கொண்டிருப்பார்கள். மேலும் தங்களால் முடிந்தவரை எல்லா மொழி படங்களிலும் நடித்து, சம்பாதித்து விட்டு அந்தந்த மக்களுக்கு ஏற்ற மாதிரி மேடைகளில் பேசி வருவார்கள்.

ஒரு மொழியில் தங்களுடைய படம் ஹிட் அடிக்க போகிறது என்று தெரிந்தால் அந்த மாநில மக்களுக்கு ஏற்றது போல் பேசுவார்கள் இந்த நடிகர்கள். ஆனால் உண்மையில் அவர்களுடைய உள் மனதில் தன்னுடைய சொந்த மண் மீது தான் உண்மையான அக்கறையும், உணர்வும் அந்த நடிகர்களுக்கு இருக்கும். இது சில நேரங்களில் ரொம்பவும் வெளிப்படையாகவே வெளியில் தெரிந்துவிடும். ஒரு சிலர் நாங்கள் இப்படித்தான் என்று ஒத்துக் கொள்வார்கள். ஒரு சிலர் அது வெளியில் தெரியாத மாதிரி நடித்துக் கொண்டு இருப்பார்கள்.

Also Read:சோழ ராஜ்யத்தை யார் கைப்பற்றியது? சிலிர்க்க வைத்த மணிரத்தினம், பொன்னியின் செல்வன்-2 முழு விமர்சனம்

தமிழ் சினிமாவில் மற்ற மொழி ஹீரோக்களை அவ்வளவாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் கேரளாவில் இருந்து நடிக்க வரும் நடிகர்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும். அப்படி தமிழ்நாட்டில் நல்ல வரவேற்புடன் இருக்கும் கேரள நடிகர்கள் தான் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம். இதில் ஜெயராம் நிறைய நேரடி தமிழ் படங்களில் நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறார். ஜெயராமுக்கு என்று தமிழ்நாட்டில் ரசிகர்கள் கூட்டமும் அதிகம்.

சமீபத்தில் கூட மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், வாசகர்கள் அனைவருக்கும் பிடித்த கதாபாத்திரமான ஆழ்வார்கடியான் நம்பி கேரக்டரில் இவர் நடித்திருந்தார். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் வசம் கவர்ந்து விட்டார். இவருடைய வழியில் வந்து கொண்டிருப்பவர் தான் காளிதாஸ் ஜெயராம். ஜெயராமின் மகன் என்பதை தாண்டி சிறந்த நடிகரும் கூட.

Also Read:வம்சத்தை கருவறுக்க காத்திருந்த நந்தினி.. நேருக்கு நேர் சந்தித்த ஆதித்த கரிகாலன், மிரட்டிவிட்ட பொன்னியின் செல்வன் 2

காளிதாஸ் ஜெயராம் முழுக்க முழுக்க வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னையில் தான். பாவ கதைகள் என்னும் சீரிஸில் இவர் நடித்த கதாபாத்திரம் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. காளிதாஸ் தற்பொழுது சென்னையில் ஜெயராமுக்கு சொந்தமான பங்களாவில் தான் தங்கி இருக்கிறார். இது ஜெயராமுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். அவருடைய மகன் கேரளாவில் வந்து இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசையாம்.

இதனால் மகனை பலமுறை தொந்தரவு செய்து இருக்கிறார் ஜெயராம். ஆனால் காளிதாஸ் சென்னை தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று சொல்லி இங்கேயே தங்கி இருக்கிறாராம் . தமிழ்நாட்டு ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜெயராம் இப்படி திடீரென்று தமிழ்நாடு, கேரளா என தனித்தனியாக பிரித்துப் பார்ப்பது கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருக்கிறது. இவர்களைப் போன்ற நடிகர்களுக்கு சம்பாதிப்பதற்கு மட்டுமே மற்ற மொழிகளை நாடி வருகிறார்கள். மற்றபடி இது போன்ற விஷயங்களில் இன்னும் கறாராக தான் இருக்கிறார்கள்.

Also Read:அடித்து நொறுக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் அட்வான்ஸ் புக்கிங்.. வசூல் மட்டும் இத்தனை கோடியா

Trending News