வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

Sivakarthikeyan- ஆண்டவர பகைச்சிக்க கூடாதுன்னு ஓடிய சிவகார்த்திகேயன்.. முக்காடு போட்ட முருகதாஸ்

Sivakarthikeyan: சிவகார்த்திகேயன், கமல் தயாரிப்பில் அமரன் படத்தில் நடித்து வருகிறார். மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை கதையான இப்படத்தின் டீசரே மெய்சிலிர்க்க வைத்தது.

நிச்சயம் இப்படம் சிவகார்த்திகேயனுக்கு பெரும் அடையாளமாக இருக்கும். அதை தொடர்ந்து ஏ ஆர் முருகதாசுடன் இவர் இணையும் அறிவிப்பும் வெளிவந்தது.

இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால் அதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. என்னவென்றால் அமரன் படத்தில் இன்னும் சில காட்சிகளை முடிக்க வேண்டி இருக்கிறதாம்.

முருகதாஸ் படத்துக்கு வந்த சிக்கல்

ஆனால் முருகதாஸ் அதற்கு சம்மதிக்கவில்லை. ஏனென்றால் அப்படத்தில் மிலிட்டரி ஆபீஸர் கதாபாத்திரம் என்பதால் சிவகார்த்திகேயனின் தோற்றமும் அதற்கு ஏற்றது போல் இருந்தது.

ஆனால் ஏ ஆர் முருகதாஸ் படத்திற்கு வேற கெட்டப். அதுவும் இல்லாமல் படத்தை முடிக்க வேண்டிய கட்டாயமும் அவருக்கு இருக்கிறது. ஏனென்றால் சல்மான் கான் வேறு காத்து கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் மீண்டும் அமரன் படத்திற்கு சிவகார்த்திகேயன் போவதை அவர் விரும்பவில்லை.

ஆனாலும் இயக்குனர் பேச்சை மதிக்காமல் அவர் இப்போது கமல் படத்திற்காக மூணாறு சென்று விட்டாராம். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தலையில் முக்காடு போட்ட கதையாக முருகதாஸ் முழித்துக் கொண்டிருக்கிறார்.

Trending News