ஏ ஆர் முருகதாஸ் மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை குறித்த திரைப்படம் கஜினி. தமிழில் மட்டுமல்லாமல் வெளியான அனைத்து மொழிகளிலும் வசூலை வாரி குவித்தது. இந்த படத்தை பார்த்து விரும்பிய பாலிவுட் நடிகர் அமீர்கான் ஹிந்தியில் ரீமேக் செய்து நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்தப் படத்திற்கு பிறகு சூர்யாவின் மார்க்கெட் எந்த உயரத்திற்கு சென்றது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மற்ற மாநில ரசிகர்களையும் சூர்யாவின் ரசிகர்களாக மாற்றிய பெருமையும் இந்த படத்திற்கு உண்டு.
அப்பேர்பட்ட பட வாய்ப்பை ஒரே ஒரு காரணத்தை வைத்து அந்த நடிகர் நழுவ விட்டு விட்டாரே என சினிமா வட்டாரங்களில் கவலைப்படுகிறார்கள். ஆனால் அவரும் என்று ஒரு முன்னணி நடிகர் தான் என்பதையும் மறக்கக் கூடாது.
தமிழைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர்களும் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயம் தான். ஒரு காலத்தில் பெரும்பாலான தெலுங்கு படங்கள் தமிழில் ரீமேக் ஆகும் தமிழ் படங்கள் தெலுங்கில் ரீமேக்காகும் சகஜமாக இருந்தது.
அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் பவர்ஸ்டார் பவன்கல்யாண் என்பவர் கஜினி தெலுங்கு ரீமேக் படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம். அதிலும் முக்கியமாக மொட்டை அடிக்கும் காட்சி இருந்ததால் வாய்ப்பே இல்ல ராஜா என ஏழு முருகதாஸை திருப்பி வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டாராம்.
தற்போது பவன் கல்யாண் நடிப்பில் தல அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை தெலுங்கு ரீமேக் உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. சினிமாவைப் பொருத்தவரை நோகாமல் நோன்பு கும்பிடுவது அதிகம்தான்.