ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

யானை படுத்தாலும் குதிரை மட்டம் தான் சீறும் ஏ ஆர் முருகதாஸ்.. 3 வருஷம் முடங்கினாலும் கெத்து காட்டும் இயக்குனர்

A.R. Murugadoss expects high salary for SK 23: சினிமாவில் கலைஞர்கள் தனது கலை திறமையை வெளிப்படுத்துகிறார்களோ இல்லையோ கறாராக தன் சம்பளத்தை கேட்டு வாங்கி விடுகின்றனர். ஒரு தரமான திரைப்படம் உருவாகிறது என்றால் பட்ஜெட்டின் பெரும் பகுதி நடிக நடிகையருக்கும் இயக்குனருக்குமே ஒதுக்கிடப்படுகிறது.

தமிழ் திரை உலகில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களின் பட்டியலில் சங்கர், மணிரத்தினம், நெல்சன் இவர்களைத் தொடர்ந்து ஏஆர்முருகதாஸ் மற்றும் ராகவா லாரன்ஸ் உள்ளனர். ஏ ஆர் முருகதாஸின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் சுமாரான விமர்சனங்களுடன் எதிர்பார்த்த அளவு வசூலையும் எட்ட முடியாமல் போனது.

தர்பாரின் தோல்வியை ஏற்றுக்கொண்டு பக்குவமாக பேசிய ஏ ஆர் முருகதாஸ் மூன்று வருடம் எந்த நடிகரோடும் கமிட் ஆகாமல் தமிழ் சினிமாவை விட்டு விலகியே இருந்தார் என்று கூறலாம். இடைப்பட்ட காலத்தில் பாலிவுட்டில் அனிமேஷன் படத்தில்  ஈடுபட்டதாக கூறியுள்ளார்.

Also read: கமல், பாக்கியராஜ் செய்த தில்லாலங்கடி வேலை.. வசமாக சிக்கிக்கொண்ட சிவகார்த்திகேயன்

கமர்சியல் படங்களில் சிறப்பான திரைக்கதையுடன் சமூக அக்கறையும் கலந்து ஹிட்டாக்கி விடுவது ஏ ஆர் முருகதாஸின் சூத்திரம். கஜினி, கத்தி, துப்பாக்கி என பல வெற்றி படங்களை கொடுத்தவர், தற்போது ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் மற்றும் மாஸ் ஹீரோ சிவகார்த்திகேயனுடன் SK 23 படத்திற்காக இணைந்துள்ளார்.

கஜினி போன்று சுவாரஸ்யமான திரைக்கதையுடன் சிவகார்த்திகேயன் போலீஸ் கெட்டப்பில் தோன்றும் எஸ்கே 23 படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் பாலிவுட் நட்சத்திரம் வித்யூத் ஜம்வால் கன்னட நடிகை ருக்மணி வசந்த் போன்றோர் நடிக்கின்றனர். 

சிங்கத்தின் கால்கள் பழுத்து பட்டாலும் சீற்றம் குறைவதில்லை என்பது போல் தர்பார் படத்தில் கலவையான விமர்சனங்கள் வந்த போதும் வசூல் 220 கோடியை தாண்டியது. இதில் இயக்குனரின் சம்பளமோ 33 கோடியாக இருந்தது. அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் விஜய் 65 படத்தில் அதிக சம்பளம் கேட்டதின் காரணமாகவே விஜய் உடன் இணைய முடியாமல் போனது என பல செய்திகள் வந்த நிலையில் இப்பவும் முந்திய படத்தின் சம்பளத்தை விட அதிகம் கேட்டு தயாரிப்பாளரை அசர வைத்துள்ளார் ஏ ஆர் முருகதாஸ். 

Also read: ஏ ஆர் முருகதாஸ் பெருமை பட்ட சம்பவம்.. விஜய் பட வெற்றிக்கு ட்ரீட் கொடுத்த எஸ் ஜே சூர்யா

Trending News