வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

ஒத்த கதையோடு காத்திருக்கும் முருகதாஸ்.. ஒருத்தரும் சிக்காமல் டிமிக்கி கொடுக்கும் நடிகர்கள்

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவரது படங்கள் அனைத்துமே சமீபகாலமாக 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகின்றன.

தமிழ் மட்டுமில்லாமல் அண்டை மாநிலங்களான தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் பல முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கி அங்கேயும் தனது திறமையின் மூலம் வெற்றியும் கண்டார். பல வருடங்களாக சினிமாவில் இருக்கும் முருகதாஸ் எப்படியாவது ரஜினிகாந்த் அவர்களுடன் ஒரு படத்திலாவது பணியாற்றி விட வேண்டும் என அனைத்து பேட்டிகளிலும் கூறிவந்தார்.

அவர் நினைத்தது போலவே சமீபத்தில் ரஜினியுடன் கூட்டணி அமைத்து தர்பார் எனும் படத்தை ரஜினி ரசிகர்களுக்கு கொடுத்தார். இப்படம் ரஜினி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. ஆனால் ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினி ரசிகர் என்பதால் தர்பார் படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் ரஜினியை மாஸாக காட்டி இருப்பார்.

rajinikanth-ar murugadoss
rajinikanth-ar murugadoss

அதுமட்டுமில்லாமல் தன்னுடைய அப்பா பெயரான அருணாச்சலம் மற்றும் மகன் பெயரான ஆதித்யா. இந்த இரண்டு பெயர்களை சேர்த்து தான் ஏ.ஆர்.முருகதாஸ் தர்பார் படத்தில் ரஜினிகாந்துக்கு ஆதித்யா அருணாச்சலம் என பெயர் வைத்திருப்பார்.

அது தர்பார் படத்தின் ஆடியோ விழாவில் அனைவரும் முன்னிலையிலும் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் அவருக்கு இப்படி ஒரு சென்டிமென்ட் இருப்பதாகவும் அவருடைய சினிமா வட்டார நண்பர்கள் தெரிவித்து வந்தனர்.

சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் சிறப்பான கதையை எழுதி வைத்துவிட்டு எந்த நடிகருடன் பணியாற்றுவது என தெரியாமல் முழித்து வருவதாக  சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஆனால் எல்லாம் கதை ஓகே ஆனால் வெயிட் பண்ணுங்க என சொல்லி கொண்டே போகிறார்களாம். அதிலும் தெலுங்கில் அதிகமாக சம்பளம் கிடைக்கும் என அங்கயும் முயற்சி செய்துள்ளார் ஆனால் ஸ்பைடர் படத்தின் தோல்வியால் அங்கயும் சிக்கல்தான்.

Trending News