துணை இயக்குனர்களை வழிநடத்தி செல்லும் கடமை ஒரு இயக்குனர்களுக்கு உண்டு என்ற கொள்கையோடு வாழ்பவர் ஏ ஆர் முருகதாஸ். இவர் இயக்கிய கஜினி படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு மாபெரும் வெற்றி கண்டது. அதைத்தொடர்ந்து துப்பாக்கி, கத்தி போன்ற படங்களின் வெற்றிக்கு பின் பெரும் தோல்வியை சந்தித்த படம் தான் தர்பார்.
இப்பட தோல்விக்கு தான் தான் காரணம் என்று அவர் ஒப்புக்கொண்ட நிலையில் சமீபத்தில் ஆகஸ்ட் 16 1947 பட ஆடியோ லாஞ்சில் கலந்துகொண்ட ஏஆர் முருகதாஸ் கூறிய நொண்டி சாக்கு ரஜினி ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது. அதாவது தர்பார் பட தயாரிப்பின் போது தனக்குரிய நேரத்தை கொடுக்காமல் குறிப்பிட்ட தேதிக்குள் படத்தை வெளியிட வேண்டும் என்று ரஜினிகாந்த் நெருக்கடி கொடுத்ததாக அவர் கூறினார்.
Also read: மயில் நடிகை மீது ரஜினிக்கு இருந்த காதல்.. சென்டிமென்ட் பார்த்து தவறவிட்ட சூப்பர் ஸ்டார்
மேலும் அவர் அரசியலில் தனி கட்சி ஆரம்பிக்க போவதாக கூறி இப்படத்தை ஜூன் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்று கூறியது தான் தோல்விக்கு காரணம் என்றார் முருகதாஸ். அது மட்டுமின்றி படத்திற்கான போதிய பிளானிங் செய்யாததால் ஓடுகின்ற வண்டிக்கு பஞ்சர் போடுவது போன்று இப்படத்தை எடுத்துள்ளதாக இன்டர்வியூ ஒன்றில் கூறியுள்ளார்.
பல வெற்றி படங்களை இயக்கிய முருகதாஸ் இவ்வாறு கூறியது தற்போது ரஜினி ரசிகர்களை ஆத்திரப்பட செய்துள்ளது. பரமபதத்தில் பாம்பு கடித்து ஏணியிலிருந்து சறுக்கத்தை அடைவது போன்று அவருக்கு தர்பார் படம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு படம் வெற்றி பெறுவது அல்லது தோல்வி அடைவது இயக்குனரின் கதையை பொருத்தே அமைகிறது.
அவ்வாறு இருப்பின் தர்பார் படதோல்விக்கு இவர் சொன்ன காரணம் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு பிரபல இயக்குனர் ஏதோ ஒரு சில படம் எடுத்த இயக்குனர் போன்று நொண்டி சாக்கு கூறி வருவது ரஜினி ரசிகர்களை அதிருப்தி அடைய செய்திருக்கிறது. இதனால் அவருக்கான எதிர்ப்பும் தற்போது கிளம்பியுள்ளது.
மேலும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் சிவகார்த்திகேயனுடன் இணைய இருக்கிறார். இந்த நேரத்தில் அவர் இப்படி பொறுப்பற்ற தன்மையோடு பேசி வருவது அவருடைய படத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இருந்தாலும் அவர் இந்த விமர்சனங்களை கடந்து தன் இலக்கை நோக்கி முன்னேறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Also read: ஏ.ஆர் முருகதாஸ் மேல் இருக்கும் திருட்டு பட்டம்.. உண்மையை அம்பலப்படுத்திய இயக்குனர்