A.R. Rahman came to the dhanush movie shooting spot and like his direction: இன்றைய நடைமுறையில் உலகமயமாக்கல் தத்துவம் விரிவடைந்து கொண்டே வருகிறது.
கலை துறையும் தனது படைப்புகளை தனக்குரியது என்று மட்டும் சொந்தம் கொண்டாடாமல் பான் இந்தியா மூவியாக மொழியை கடந்து சினிமா ஆர்வலர்கள் அனைவரும் கொண்டாடும் படைப்புகளாகவே வெளி வருகிறது.
தரமான சிறந்த படைப்புகளையும் படைப்பாளிகளையும் ரசிகர்கள் கொண்டாடத் தவறுவதில்லை. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக பல வெற்றி படங்களை கொடுப்பவர்தான் வெற்றிமாறன்.
உதவி இயக்குனராக அறிமுகமாகி பொல்லாதவன் திரைப்படத்தில் தனக்குரிய தடத்தை பதித்து ஆடுகளம் திரைப்படத்தில் தேசிய விருதை தட்டிச் சென்ற வெற்றிமாறனின் ஆஸ்தான ஹீரோ யார் என்றால் அது தனுஷ் மட்டுமே.
இருவருக்கும் இடையே ஒரு நல்ல பாண்டிங் இருப்பதால், பொல்லாதவனைத் தொடர்ந்து ஆடுகளம், அசுரன் என பல படங்களை பகிர்ந்து அளித்தது இந்த கூட்டணி.
வளர்ந்து வரும் நடிகரான தனுஷ், நடிப்பில் மட்டுமல்லாது இயக்கத்தையும் கையில் எடுத்து, பா பாண்டி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தற்போது தனுஷ் ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் போன்ற படங்களை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மரியான் திரைப்படத்திற்கு பின் ராயனில் கூட்டணி போடும் தனுஷ் மற்றும் ஏ ஆர் ரகுமான்
தரமான கேங்ஸ்டர் ஸ்டோரியான ராயன் திரைப்படத்தில் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்திப் கிஷன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். இசை ஏ ஆர் ரகுமான்
தனுஷ் நடிப்பில் வெளியான மரியான் திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளுக்கு பின் தனுஷின் ராயன் படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார்
பொதுவாக ஏஆர் ரகுமான் இசையமைப்பதோடு நிறுத்திக் கொள்வார். எந்த ஒரு படத்தின் சூட்டிங்கிற்கும் நேரடியாக கலந்து கொள்வது கிடையாது
ஆனால் தனுஷ் இயக்கும் ராயன் படத்தின் பேக்ரவுண்ட் மியூசிக் அமைக்கும் போது இம்ப்ரஸ் ஆன ஏ ஆர் ரகுமான் படப்பிடிப்பை நேரில் சென்று கண்டு களிப்பது மட்டுமின்றி மணி கணக்கில் உட்கார்ந்து ரசித்து வருகிறாராம்
தனுஷ் அடுத்த வெற்றிமாறனாக மாறிவிட்டார். ராயன் படம் அவ்வளவு சூப்பரா இருக்கு! என பலர் திரை பிரபலங்களும் சினிமா ஆர்வலர்களும் கூறி வருகின்றனர்.
நடிப்பை தாண்டி தயாரிப்பாளர் பாடகர் பாடலாசிரியர் இயக்குனர் என பன்முக திறமையோடு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் தனுஷின் திறமை உண்மையிலேயே பாராட்டுதலுக்கு உரிய ஒன்றுதான்.