வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

AR ரஹ்மானுக்கும் எனக்கும் என்ன உறவு தெரியுமா? அசிங்கமா பேசாதீங்க! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி

சினிமாத்துறையில் இருக்கும் நடிகர், நடிகைகள் மீது வதந்திகள் பரவும். இதுகுறித்த விவாதரங்கள் எழும். சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு வக்கீல் மூலம் அறிக்கை வெளியிட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, ஏ.ஆர்.ரஹ்மானும் இதுகுறித்து சமூக வலைதளத்தில் ஹேஸ் டேக்குடன் ஒரு பதிவிட்டிருந்தார்.
அவர்களின் அறிக்கை வெளியான சில மணி நேரங்களில், ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்குழுவில் இடம்பெற்றிருந்த கிடார் இசைக்கலைஞர் மோகினி டே தன் கணவரை பிரிவதாக அறிவித்தார். இதுகுறித்து, யூடியூப்பிலும், மீடியாவிலும் சர்ச்சைக்குரிய கருத்துகள் கூறி, பதிவிட்டிருந்தனர்.

இது பெரும் பேசுபொருளானது. இருவரையும் பற்றி பல்வேறு வதந்திகள் பரவின. யூடியூப்பிலும் இதுபற்றி விவாதங்கள் எழுந்தன. தன்னைப் பற்றிய அவதூறு பதிவுகளை நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஏ.ஆர்.ரஹ்மான் எச்சரித்திருந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவியும், ஏ.ஆர்.ரஹ்மான் மீது அவதூறு பரப்பாதீர்கள். அவர் உலகிலேயே சிறந்த மனிதர். நாங்கள் இன்னும் பிரியவில்லை என்று கூறி ஒரு ஆடியோ வெளியிட்டிருந்தார். ஏ.ஆர். ரஹ்மான் தம்பதியரின் மகன் அமீனும் பதிவிட்டிருந்தார்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மோனிகா டே

இந்த நிலையில், தன்னைச் சுற்றி பரவி வரும் வதந்திகள் பற்றி இசைக்கலைஞர் மோகினி டே தன் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், ”ஆதாரமற்ற தகவல்களைப் பரப்ப வேண்டாம். இதனால் என் கணவருடனான விவாகரத்து தவறாக பேசப்பட்டு வருகிறது. நான் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழுவில் பல ஆண்டுகளாக வேலை செய்கிறேன்.

ஏ.ஆர்.ரஹ்மான் என் தந்தையைப் போன்றவர். நான் ரொம்ப மதிக்கின்ற நபர். எங்கள் இருவருக்கும் இடையே எந்த தொடர்புமில்லை. யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி அவதூறு கருத்துகள் பதிவிட்ட யூடியூப்பர்ஸ், மீடியாக்கள், ஏ.ஆர்.ரஹ்மானின் சட்டபூர்வ நடவடிக்கைகளுக்குப் பயந்து அதை நீக்கி வருவதாகக் கூறப்படுகிறது.

Trending News