வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ஏ.ஆர்.ரஹ்மானின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? யாரும் கிட்ட நெருங்க முடியாது போல

சினிமாவில் இருக்கும் பிரபலங்களில் வெகு எதார்த்தமானவராக அறியப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். அவர் தன் தந்தை ஆ.கே.சேகரின் மறைவுக்குப் பின் தன் இசையுலகப் பயணத்தை கடந்த 1985 -ல் ஆரம்பித்தார். ஆரம்பத்தில் தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு அதில் வருமானம் ஈட்டி வந்த நிலையில் முறைப்படி இசைக் கற்றுக் கொண்டார்.

தன் 11 வயதில் இளையராஜாவின் இசைக்குழுவின் இடம்பெற்று கீபோர்டு வாசித்து வந்தார். அதேபோல் அப்போதைய முன்னணி இசையமைப்பாளர்களான எம்.எஸ்.விஸ்வ நாதன், ரமேஷ் நாயுடு, டி.ராஜேந்திரர் உள்ளிட்டோரிடம் இசையமைப்பாளராகப் பணியாற்றினார்.

பிரபல காமெடி நடிகர் மதன் பாபுவிடம் இசைக்குழுவில் பணியாற்றியபோது, அவரிடம் இருந்து சில நுணுக்கங்களை கற்றுக் கொண்டதாக ஏ.ஆர்.ரஹ்மானே கூறியிருக்கிறார். ஆரம்பத்தில் விளம்பரங்கள் ஜிங்கில்ஸூக்கு இசையமைத்து வந்த அவர், மணிரத்னத்தின் ரோஜா படத்தில் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்தார்.

முதல் படத்திலேயே நாடு முழுவதும் பிரபலமாகி, தேசிய விருது வென்றார். அடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி படங்களைத் தாண்டி ஹாலிவுட்டுக்குச் சென்று இசையமைத்தார். இதற்கிடையே, கடந்த 1995 ஆம் ஆண்டு சாய்ராபானுவை திருமணம் செய்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 பெண் மற்றும் 1 ஆண் என 3 குழந்தைகள் உள்ளனர்.

ஏ. ஆர். ரஹ்மானின் சம்பளம் & சொத்து மதிப்பு

கடந்த 2008 ஆம் ஆண்டு, ஸ்லம்டாக் மில்லியனார் படத்துக்காக 2 ஆஸ்கர் விருது வென்று சாதனை படைத்தார். அவருக்கு சென்னையிலும், துபாயிலும் சொந்தமாக ஸ்டுடியோ உள்ளது. சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும் முன்னணி இசையமைப்பாளராக கிளீன் இமேஜீடன் வாழ்ந்து வருபவர் ஏ.ஆர்.ரஹ்மான்.

தற்போது காதலிக்க நேரமில்லை, சூர்யா 45, ஜீனி ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ஒரு படத்தில் இசையமைக்க ரஹ்மானுக்கு ரூ.10 கோடி வரை சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது. அதேபோல் ஒரு பாடல் பாடுவதற்கு ரூ.3 கோடி வரை சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருமணமாகி 30 வது திருமண நாளை கொண்டாட இருந்த நிலையில் நேற்று முன் தினம் அவரது மனைவி சாய்ரா பானு ஏ.ஆர்.ரஹ்மானை விட்டுப் பிரிவதாகவும் விவாகரத்து பெற முடிவெடுத்திருப்பதாகவும் வக்கீல் மூலம் அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து, ரஹ்மானும் ஹேஸ்டேக்குடன் ’’உடைந்த இதயங்களினால் கடவுளின் சிம்மாசனம் நடுங்கும்’’ என்று கூறியிருந்தார். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் இருவரும் சேர வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இசையையில் கோலோட்சி வரும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ரூ.600 கோடிக்கு மேல் சொத்துகள் இருக்கலாம் எனவும், இந்திய சினிமாவில் அதிகளவில் சொத்துகள் கொண்ட இசையமைப்பாளரும் இவர்தான் என தகவவல் வெளியாகிறது.

Trending News