வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நிஜத்தில் நடிக்க தெரியாத எதார்த்தமான மனுஷன்.. விஜயகாந்தை வீழ்த்த நடந்த சதி

தமிழ் சினிமாவில் எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக விஜயகாந்த் தான் மக்களுக்கும், சினிமா தொழிலாளர்களுக்கும் ஏராளமான நல்ல விஷயங்களை செய்திருக்கிறார். இவரை தேடி யாராவது உதவி என்று வந்துவிட்டால் இல்லை என்று சொல்லாமல் ஓடி வந்து உதவி செய்யக்கூடிய தங்க மனசுக்காரர். மிகவும் யதார்த்தமான மனிதராகவும் இவர் இருந்தார்.

சினிமாவை தாண்டி அரசியலிலும் ஜொலித்த இவர் நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாதவர். அதனாலேயே இவரை வீழ்த்த பல துரோகங்கள் நடந்திருக்கிறது. சொல்லப்போனால் இவரால் சினிமாவில் வளர்ந்தவர்கள் கூட இவரை பற்றி மோசமாக பேசிய சம்பவங்களும் இருக்கிறது. ஆனால் அதை எதையுமே விஜயகாந்த் மனதில் வைத்துக் கொள்ள மாட்டார். அதை வைத்து பழிவாங்கவும் மாட்டார்.

Also read : போலீஸ் கதாபாத்திரத்தில் வெற்றிகண்ட 10 ஹீரோக்கள்.. சத்திரியனுக்கு சாவே இல்ல என மிரட்டிய விஜயகாந்த்

அப்படிப்பட்ட இவரையும் சிலர் துரோகத்தால் வீழ்த்த முயற்சி செய்து இருக்கின்றனர். அந்த வகையில் இவர் அரசியலில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்த சமயம் அது. ஆரம்பத்தில் இவரெல்லாம் அரசியலில் வந்து என்ன சாதிக்கப் போகிறார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் அடுத்தடுத்து முயற்சி செய்து இவர் எதிர் கட்சி தலைவர் என்ற அந்தஸ்தை அடைந்து பலரையும் ஆச்சரியப்படுத்தினார்.

அது மட்டுமல்லாமல் பலரும் எதிர்க்க தயங்கும் ஜெயலலிதாவையே தைரியமாக எதிர்த்து கேள்வி கேட்கக்கூடிய ஒருவராகவும் இவர் இருந்திருக்கிறார். அப்படித்தான் ஒருமுறை சட்டசபையில் இவர் ஜெயலலிதாவுக்கு எதிராக கேள்வி எழுப்பினார். இது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஆனால் ஜெயலலிதா இந்த சம்பவத்தை மனதில் வைத்துக்கொண்டு அவருக்கு எதிராக பல விஷயங்களை செய்தார்.

Also read : கமல், விஜயகாந்த் சேர்ந்து நடித்த ஒரே படம்.. ஜாம்பவான்கள் சேர காரணமாக இருந்த நடிகை

அதன் முதல் கட்டமாக விஜயகாந்த் கட்சியில் இருந்த பல முக்கிய பிரபலங்களை அவர் தன்னுடைய கட்சிக்கு மெல்ல மெல்ல இழுத்தார். ஆனாலும் மக்களின் மேல் இருந்த நம்பிக்கையில் விஜயகாந்த் தன் அரசியல் பணிகளை செய்து வந்தார். ஆனாலும் இவரை அரசியலில் வளர விடக்கூடாது என்று பலரும் கங்கணம் கட்டிக்கொண்டு இவருக்கு எதிராக திரும்பினார்கள்.

அது எல்லாம் அசால்டாக தட்டி விட்டு முன்னேறிய விஜயகாந்த் இப்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் கேப்டன் மீண்டும் அரசியல் களத்தில் குதிக்க வேண்டும் என்பதுதான் பலரின் ஆசையாக இருக்கிறது. ஆனால் சமீபத்தில் வெளியான அவருடைய போட்டோவை பார்த்த பலரும் அதிர்ந்துதான் போனார்கள். அந்த அளவுக்கு உடல் இளைத்து இருக்கும் கேப்டன் விரைவில் குணமடைய வேண்டும் என்று இப்போது பலரும் பிரார்த்தித்து வருகின்றனர்.

Also read : அஜித் கொடுத்த 10 லட்சம்.. வீடுவரை சென்று அவமானப்பட்ட விஜயகாந்த்

Trending News