திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

அஜித்துக்காக ஓடிவந்த ரஜினி.. கண்டும் காணாமல் கை கழுவிய விஜய்

Rajini-Ajith-Vijay: அண்மை காலமாகவே விஜய் எது செய்தாலும் சர்ச்சையாகவே முடிகிறது. அதே போன்று நம்பியவர்களை கூட இவர் கண்டும் காணாமல் இருக்கிறார் என்ற விமர்சனமும் எழுந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நடந்த ஒரு விஷயம் இப்போது விஜய்க்கு எதிராக திரும்பி இருக்கிறது.

அதாவது லியோ படத்தின் மாபெரும் வெற்றியை படக்குழு நேரு உள் விளையாட்டரங்கில் பிரம்மாண்டமாக கொண்டாடினார்கள். அப்போது பல சம்பவங்கள் நடந்திருந்தாலும் லோகேஷின் வலது கையான ரத்னகுமார் மேடையில் பேசியது பரபரப்பை கிளப்பியது.

ரஜினிக்கு எதிராக அவர் முன்வைத்த கருத்து இப்போது வரை விமர்சனமாக தான் இருக்கிறது. இதை விஜய்யே எதிர்பார்க்கவில்லை. அதை தொடர்ந்து அவர் ரத்னாவை கண்டித்து இருக்கிறார். அத்தோடு அவர் தன்னுடைய வேலையை பார்க்க சென்றுவிட்டார்.

Also read: அரசியல் ஆசையில் காட்டும் ஓவர் பந்தா.. தளபதியால் தலை சுற்றி போன வெங்கட் பிரபு

ஆனால் ரத்னா தான் பாவம் இப்போது பல எதிர்ப்புகளுக்கு ஆளாகியிருக்கிறார். அது மட்டுமின்றி ரஜினியின் அடுத்த படத்தை லோகேஷ் தான் இயக்குகிறார். அந்த வகையில் இந்த பிரச்சனையை சமூகமாக முடிக்க வேண்டிய விஜய் அவரை கைகழுவி விட்டார்.

ஆனால் இந்த விஷயத்தில் சூப்பர் ஸ்டாரை நிச்சயம் பாராட்ட வேண்டும். சில வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு விழாவில் அஜித் மேடையில் நடிகர்களை கட்டாயப்படுத்தி அழைக்கிறார்கள் என்று கலைஞர் முன்பு கூறியிருந்தார். இதற்கு ரஜினி கைதட்டி தன்னுடைய முழு ஆதரவை கொடுத்தார்.

அதைத்தொடர்ந்து அஜித் ஏகப்பட்ட மிரட்டல்களுக்கு ஆளானார். அப்போது ரஜினி தான் அவரை கலைஞரிடம் அழைத்துச் சென்று இந்த பிரச்சனையை முடித்து வைத்தார். அப்படி இருக்கும்போது லோகேஷுக்காக விஜய் ரத்னாவை இந்த பிரச்சனையிலிருந்து விடுபட வைத்திருக்கலாம். ஆனால் அவர் அதை செய்யாதது இப்போது விமர்சனமாக பார்க்கப்பட்டு வருகிறது.

Also read: உஷாரா எஸ்கேப் ஆன ரஜினி.. மகளையே தள்ளி வைத்த தலைவர்

Trending News