ரிலீஸான இரண்டே நாளில் 150 கோடி வசூலை வாரி குவித்த மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்திற்கு தொடர்ந்து ரசிகர்களிடம் பாசிட்டிவ் விமர்சனங்களை மட்டுமே குவிவதால் சில வாரத்திலேயே 1000 கோடியை பாக்ஸ் ஆபீசை குவிக்கும் என்று கணித்திருக்கின்றனர்.
பொன்னியின் செல்வன் படத்திற்காக முன்பே 2010 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்திலும் இதே போன்று பாண்டியர்கள் மற்றும் சோழர்களை மையமாக வைத்தே வெளிய வந்தது.
Also Read: சாதனைகளை தும்சம் செய்த மணிரத்தினம்.. இரண்டே நாட்களில் மிரள விட்ட பொன்னியின் செல்வன் வசூல்
ஆனால் ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியான காலகட்டம், சிக்கலான திரைக்கதை உள்ளிட்ட காரணங்களினால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்காமல், கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் 4 பாகங்களாக இந்த படத்தை எடுக்க நினைத்தால் செல்வராகவன், முதல்பாகம் எதிர்பார்த்த ஹிட் கொடுக்காததால் இரண்டாம் பாகத்தை எடுக்கலாமா வேண்டாமா என பலமுறை யோசித்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது பொன்னியின் செல்வன் படம் மட்டும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்து கொண்டிருப்பதைப் பார்த்து கொஞ்சம் வயிறு பொசுங்கி போயிருக்கிறார். இருப்பினும் இந்த காலகட்டத்தில் வரலாற்று படங்களை ரசிகர்கள் விரும்புகின்றனர் என்பதை உணர்ந்துள்ளார் செல்வராகவன்.
Also Read: திட்டம் போட்டு வலை விரித்த தயாரிப்பாளர்.. சரியான நேரம் பார்த்து எஸ்கேப் ஆன தனுஷ்
ஆகையால் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சிக்கலான திரைக்கதையை அமைத்ததால், இந்தமுறை ஆயிரத்தில் ஒருவன் 2ல் எளிமையான திரைக்கதையுடன் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப படத்தை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆயிரத்தில் ஒருவன் 2 பாகத்தின் படப்பிடிப்பு வரும் 2024 ஆம் ஆண்டு துவங்கப்படும் என்ற தனுஷின் போஸ்டருடன் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: பொன்னியின் செல்வனுக்காக கொண்டுவரப்பட்ட தங்க நகைகள்.. பார்த்து பார்த்து செதுக்கிய மணிரத்தினம்