புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

நடித்த 3 படங்களுமே பிளாப், ராசி இல்லன்னா விரட்டிய நம்ம சினிமா.. பிரபாஸ் முதல் ராம்சரண் வரை விடும் ஜொள்ளு

Actor Prabhas : சினிமாவில் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சில நடிகைகளுக்கு மவுசு குறைந்துவிடும். அதன் பிறகு அக்கட தேசத்திற்கு சென்று ஜொலித்த நடிகைகள் பல இருக்கிறார்கள்.

அந்த காலத்தில் ஸ்ரீ தேவி முதல் இப்போது நயன்தாரா வரை தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்த பிறகு பாலிவுட்டில் களம் இறங்கி இருக்கின்றனர். ஆனால் சிம்பு பட நடிகை ஒருவர் தமிழில் நடித்த மூன்று படமுமே பிளாப் தான்.

இதனால் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் அக்கட தேசத்தில் இந்த நடிகை தான் வேண்டும் என பாகுபலி நடிகர் பிரபாஸ் முதல் ராம் சரண் வரை அடம்பிடிக்கிறார்களாம்.

பிரபாஸ் முதல் ராம் சரண் வரை போட்டி போடும் நடிகை

அதாவது பாலிவுட்டில் முன்னா மைக்கேல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நிதி அகர்வால். தமிழில் சிம்புவின் ஈஸ்வரன், ஜெயம் ரவியின் பூமி மற்றும் உதயநிதியின் கழகத் தலைவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

நிதி அகர்வால் நடிப்பில் தமிழில் வெளியான இந்த மூன்று படங்களுமே வெற்றி பெறவில்லை இதனால் அக்கட தேசம் சென்ற நிலையில் பவன் கல்யாண் ஹரிஹர வீரமல்லு என்ற படத்தில் நடித்த வருகிறார்.

மேலும் ராம் சரண் மற்றும் பிரபாஸ் போன்ற நடிகர்கள் தனது படத்தில் நித்திய அகர்வால் நடிக்க வேண்டும் என போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். அதன்படி பிரகாசுக்கு நாயகியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

அதோடு தி ராஜா சாப் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனால் இப்போது நிதி அகர்வாலுக்கு தமிழிலும் பட வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளது. அதன்படி இரண்டு படங்கள் இப்போது ஒப்பந்தமாகி இருக்கிறார்.

Trending News