திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

5 வருடங்களாக கடன்காரர்களின் பிடியில் இருந்த ரொமான்டிக் இயக்குனர்.. கடைசியில் விக்ரமுக்கு வச்ச செக்

சினிமாவின் மூலம் இன்று இளைஞர்களுக்கும் காதலை கற்றுக் கொடுத்த ரொமான்டிக் டைரக்டர், இப்பொழுது படங்களை இயக்குவதைக் காட்டிலும் நடிப்பதில்தான் முழு கவனம் செலுத்தி வருகிறார். நிறைய  படங்களில் சிறப்பு தோற்றங்கள், வில்லன் என புது அவதாரத்தில் கலக்கி வருகிறார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்.

இந்நிலையில் 5 வருடத்திற்கு முன்பு கௌதம் எடுத்த படம் ஒன்று இன்னும் நிலுவையில் இருக்கிறது. விக்ரமை வைத்து கௌதம் எடுத்த படம் துருவ நட்சத்திரம். இந்த படம் ஐந்து ஆண்டுகளாக ரிலீஸ் ஆகவில்லை. இதில் விக்ரமுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து உள்ளார்.

Also Read: பகிரங்கமாக கௌதம் மேனனிடம் கோரிக்கை வைத்த இளம் சீரியல் நடிகை.. சிம்புவையும் விட்டு வைக்கல

கௌதம் வாசுதேவ் மேனனுக்கு நிறைய கடன்கள் இருக்கிறது. அந்த கடனை எல்லாம் அடைக்க, இன்று வரை நடிப்பில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இப்பொழுது கடனை முழுவதும் அடைத்த பிறகு தான் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி வழங்குவோம் என கடன்காரர்கள் கௌதமை சுற்றி வளைத்துள்ளனர். இருப்பினும் வருகிற மே மாதம் 19ஆம் தேதி துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்ய பிளான் பண்ணி இருக்கிறார்
கௌதம்.

இப்பொழுது கௌதமுக்கு செக்கோ இல்லையோ, சியான் விக்ரமுக்கு தான் ஆப்பு வைத்து விட்டனர். ஏனென்றால் இவருடைய சமீப கால படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனால் துருவ நட்சத்திரம் படத்தின் மூலம் விட்டதை பிடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார். ஆனால் கௌதம் வாங்கிய கடனால் அதற்கும் வழியில்லாத சூழல் நிலவுகிறது.

Also Read: அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்த தங்கலான் பட நடிகை.. ரசிச்சு ருசிச்சு போட்டோ எடுத்தது நம்ம சியானா!

இருந்தாலும் பல முயற்சிகளை மேற்கொண்டு இந்த படத்தை எப்படியாவது வெளியிட வேண்டும் என்று முடிவுக்கு வந்துவிட்டனர். ஐந்து வருடங்களாக ரசிகர்களை காக்க வைத்த துருவ நட்சத்திரம் படத்தை வரும் கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்து வசூலை அள்ள வேண்டும் என்ற முடிவுடன் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சியான் விக்ரம் இருவரும் ரிலீஸ் தேதியை லாக் செய்துள்ளனர்.

இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் கைப்பற்றியுள்ளது. தற்போது சியான் விக்ரம் பா. ரஞ்சித் இயக்கத்தில் வித்தியாசமான கெட்டப்பில் தங்கலான் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டு படங்களின் மூலம் தான் விக்ரம் தன்னுடைய மார்க்கெட்டை எட்டிப் பிடிக்க பார்க்கிறார்.

Also Read: படமே ஓடாத விக்ரமுக்கு இவ்வளவு சம்பளமா.. ஹிட் ஹீரோக்கள் கூட வாயை பிளக்கும் சம்பளம்

Trending News