திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரஜினியை நம்புறது வேஸ்ட்.. விஜய்யின் அரசியல் என்ட்ரியால் முக்கிய நடிகருக்கு வலை வீசும் ஆளும் கட்சி

Vijay Political Entry: தென்னிந்தியாவை பொறுத்த வரைக்கும் அரசியல் மற்றும் சினிமா என்பது ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் தான். சினிமாவில் ஒருவர் ஜெயித்து விட்டாலே அவர் அடுத்து கால் தடம் வைக்க வேண்டியது அரசியல் தான் என்பதை இங்கு எழுதப்படாத நீதி. அப்படி ரசிகர்களை நம்பி அரசியலுக்கு வந்து ஜெயித்தது ஒரு சிலர் தான். பலரும் அரசியல் ஆசையில் உள்ளே நுழைந்து ஏற்கனவே வாங்கிய மொத்த நல்ல பெயரையும் டேமேஜ் ஆக்கி தான் சைலன்ட் மோட் ஆகியிருக்கிறார்கள்.

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு பிறகு சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த யாருமே எதிர்பார்த்த அளவு ஜொலிக்கவில்லை. தற்போது நடிகர் விஜய் அரசியலில் நுழைய இருப்பது 99 சதவீதம் உறுதியாகிவிட்டது. அவர் இன்னும் அதைப் பற்றி வாய் திறந்து சொல்லாதது மட்டும் தான் பாக்கி. விஜய் அரசியலுக்கு வந்தால் மற்றவர்களின் நிலைமை தான் என மற்ற கட்சிகளுக்கு ஒரு அசட்டு தைரியம் இருந்தாலும், அவரை வைத்து ஓட்டுக்களை பிரித்து விடுவார்களோ என்ற பயமும் ஒரு பக்கம் இருக்கிறது.

மத்தியில் ஆளும் பாஜக கட்சி எப்படியாவது தமிழ்நாட்டில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என போராடி வருகிறார்கள். அது என்னவோ எத்தனை பேர் வந்தாலும் தமிழ்நாட்டில் தாமரை மட்டும் மலராது என்பது தொடர்ந்து தொடர்கதையாக நடந்து வருகிறது. இந்த முறை எப்படியாவது தங்களுடைய இருப்பை தமிழ்நாட்டில் காட்டிக் கொள்ள வேண்டும் என பாஜக பல முயற்சிகளை செய்து வந்து கொண்டிருக்கும் பொழுது, நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வு அவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கிறது.

Also Read:அஜர்பைஜான் ஷெட்யூலை முடித்த விடாமுயற்சி படக்குழு.. அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்துடன் அப்டேட் கொடுத்த தல பிஆர்ஓ

முக்கிய நடிகருக்கு வலை வீசும் ஆளும் கட்சி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு பாஜக கட்சி நடிகர் ரஜினிகாந்தை அதிகமாகவே நம்பி இருந்தார்கள். ஆனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு டாட்டா காட்டிவிட்டார். இனி ரஜினியை நம்பி பிரயோஜனம் இல்லை என்பதை புரிந்து கொண்ட பிஜேபி கட்சி, விஜய்க்கு நிகரான ஒருத்தரை தமிழக அரசியலில் தங்கள் கட்சி சார்பாக நிலைநிறுத்த வேண்டும் என விரும்புகிறார்கள். அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்து இருப்பவர் தான் நடிகர் அஜித்குமார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே மூலம் இந்த பிளானை போட்டிருப்பதாக தெரிகிறது. பாண்டே இது பற்றி நடிகர் அஜித்குமாரிடம் பேசுவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது. இருந்தாலும் அஜித் இது போன்ற திட்டத்திற்கு எல்லாம் ஒத்துக்கொள்வாரா என்பது மிகப்பெரிய சந்தேகம் தான். ஜெயலலிதா இருந்தபோதே அஜித்துக்கு அழைப்பு விடுத்தபோது அஜித் அதை மறுத்து விட்டது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இருந்தாலும் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு கண்டிப்பாக அஜித் அரசியலுக்கு வருவதைப் பற்றி யோசிப்பார் எனவும் சொல்லப்படுகிறது. அப்படியே அஜித்துக்கு அரசியல் பிளான் இருந்தாலும் அவர் பிஜேபி கட்சி உடன் சேருவாரா என்பது மிகப்பெரிய சந்தேகம் தான். நடிகர் விஜய்க்கு இணையான ஒரு பிரபலத்தை தமிழக அரசியல் களத்தில் இறக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இப்போது பிஜேபி கட்சி இருக்கிறது.

Also Read:கோடி கொடுத்தாலும் இந்த கேரக்டர்ல அஜித் கூட நடிக்க மாட்டேன்.. வீம்பு பண்ணும் விஜய் சேதுபதி

Trending News