Actor Vijay: கடந்த சில வருடங்கள் ஆகவே தளபதி விஜய்யை சுற்றி சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. அவருடைய படங்கள், இசை வெளியீட்டு விழா, மேடைப் பேச்சு என அத்தனையுமே பிரச்சினைக்கு மேல் பிரச்சனை தான். அதையும் தாண்டி விஜய் கோலிவுட் பாக்ஸ் ஆபீசின் கிங் மேக்கராக இருந்து வருகிறார். சினிமாவை பொறுத்த வரைக்கும் தற்போது விஜய் என்றால் அந்த பிரச்சனை வேறு மாதிரி, மற்ற நடிகர்கள் என்றால் அந்த பிரச்சனை வேறு மாதிரி என்று அரசியல் செய்யப்பட்டு வருகிறது.
இது போன்ற பாகுபாட்டிற்கு மிக முக்கிய காரணம் சமீப காலமாக விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பேச்சு எழுந்தது தான். அதிலும் விஜய் கல்வி விருது வழங்கும் விழா நடத்திய பிறகு, பல விஷயங்களும் சர்ச்சைக்குள்ளாகி வருகின்றன. அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கும் அவருடைய லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானதில் இருந்து விஜய்யின் மீது புகார்க்கு மேல் புகார் எழுந்து கொண்டிருக்கிறது.
Also Read:நிற்கதியாக நின்ற சரத்பாபுவின் மனைவி.. சரியான நேரத்தில் உதவிய சூப்பர் ஸ்டார்
நான் ரெடியா பாடலில் விஜய் புகை பழக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறார், மதுவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார், வன்முறையை பாடலின் மூலம் தூண்டுகிறார் என தினம் ஒரு புகார் அவர் மீது கொடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மற்ற படங்களில் இது போன்ற செய்யும் நாயகர்கள் கண்டு கொள்ளப்படவில்லை. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் ஒருவர். தற்போது அவருடைய ஜெயிலர் படத்தின் போஸ்டர் நெட்டிசன்களிடையே இடையே மிகப்பெரிய கேள்வியை எழுப்பி வருகிறது.
ஜெயிலர் போஸ்டரில் ரஜினிகாந்த் ஒரு நாற்காலியில், கையில் சுருட்டுடன் அமர்ந்திருப்பது போல் இருக்கிறது. ஆனால் இன்று வரை இதற்கு எந்த தரப்பில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்படவில்லை. தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோக்களாக இருக்கும் இவர்கள் எல்லோரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று பேசுபவர்கள் யாரும் இந்த போஸ்டரை பற்றி இன்றுவரை வாய் திறக்காமலேயே இருக்கிறார்கள்.
ஜெயிலர் படத்தின் போஸ்டர்
ஒரு காலகட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் இது போன்ற பிரச்சினைகளை சந்தித்தவர் தான். அப்போது ரஜினி அரசியலுக்கு வருவார் என்று இதேபோன்று பேச்சுக்கள் எழுந்த பொழுது புகை பிடிக்கிறார், மது அருந்துவதற்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்று அவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. 2002 ஆம் ஆண்டு பாபா பட சமயத்தில் ரஜினியே முன்வந்து இது போன்ற காட்சிகளில் இனிமேல் நடிக்க மாட்டேன் என்று கூட சொல்லி இருந்தார்.
ஆனால் இந்த போஸ்டர் படக்குழுவால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது இல்லை. ரஜினியின் ரசிகர்கள் ஜெயிலர் படத்தை கொண்டாடும் விதமாக உருவாக்கியது. ஏற்கனவே தளபதி விஜய் இப்படி ஒரு சிக்கலில் சிக்கியிருக்கும் பொழுது, இதுபோன்ற பேன் மேட் போஸ்டர்கள் தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது. இது உண்மையிலேயே படக்குழுவினரால் வெளியிடப்பட்ட போஸ்டர் என நினைத்துக் கொண்டு நெட்டிசன்களும் கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
Also Read:இழுபறியில் இருக்கும் லியோ பிசினஸ்.. ரெட் ஜெயண்டை ஓரம் கட்டியதால் சூட்சமம் செய்யும் டாப் நிறுவனம்