ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

இந்தியன் 2 படத்தில் இப்படி ஒரு காட்சியா?. 100 பேர் கொண்ட குடும்பத்தை கொத்தோடு தூக்கிய ஷங்கர்

ஷங்கர்- கமலஹாசன் கூட்டணியில் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் வெற்றிக்கு பிறகு, மீண்டும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உள்ளிட்ட  பிரபலங்கள் இணைந்து  நடித்து வருகின்றனர்.

படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் இப்படி ஒரு காட்சியா! என பலரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், 100 பேர் கொண்ட குடும்பத்தை கொத்தோடு ஷங்கர் தூக்கி இருக்கும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

Also Read: இப்பவே தோல்வி பயத்தை காட்டும் கமல்.. பதட்டத்துடன் இருக்கும் லியோ படக்குழு

இந்தியன் 2 படத்திற்காக புதுவிதமான சில விஷயங்களை ஷங்கர் ஒவ்வொரு நாளும் செய்து வருகிறார். சுதந்திர போராட்டத்திற்கு முன்பு சென்னை எப்படி இருந்தது என்று பலருக்கும் தெரியாததால், அதை அப்படியே படத்தில் கண் முன் காட்ட வேண்டும் என சில விஷயங்களை புதுசாக செட்டு போட்டு வைத்துள்ளார் ஷங்கர்.

இதை இதுவரை எந்த படத்திலும் பார்க்காத பழைய சென்னையை பார்க்க முடியும் என்ற நம்பிக்கையில் செய்திருக்கிறார். அது மட்டுமல்ல அந்த காட்சிக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, 100 பேர் கொண்ட குடும்பத்தை கொத்தோடு தூக்கி  இருக்கிறார்.

Also Read: கஜானாவை திறக்காமலே படத்தை தயாரிக்கும் கமல்.. ராஜதந்திரியாக மாறிய உலக நாயகன்

மதுரையில் ஒரே குடும்பத்தில் நான்கு தலைமுறைகளாக வாழும் கூட்டுக் குடும்பம் ஒன்று உள்ளது. அதில் 100 பேருக்கு மேல் வாழ்ந்து வருகிறார்கள். இது எப்படியோ ஷங்கர் கண்டுபிடித்து இவர்களை வைத்து, அதுக்காக இரண்டு மூன்று காட்சிகளை எழுதி, இந்தியன் 2 படத்தில் இந்த குடும்பத்திலிருந்து 50 பேரை நடிக்க வைத்திருக்கிறார்.

இந்த காட்சி சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பு நடந்தது போல் உருவாகி இருக்கிறாராம். இதுவும் மிக பிரம்மாண்டமாகவும் புதுவிதமாகவும் இந்த காட்சி அமைந்திருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற முடிவில் இருப்பதால் ஒவ்வொரு நாளும் இந்தியன் 2 படத்தை குறித்து வெளியாகும் அப்டேட், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கிறது.

Also Read: ரஜினியின் கதையில் நடிக்கும் சிம்பு.. கமலுக்காக பல கோடி சம்பளத்தை குறைத்துக் கொண்ட சம்பவம்

Trending News