வியாழக்கிழமை, நவம்பர் 28, 2024

ஞானவேல் மாதிரி ஏக்கர் கணக்கில் புளுகிய சீமான்.. கலாய்த்துவிட்ட புளூ சட்டை மாறன்!

தமிழகத்தில் பார்க்கிற இடமெல்லாம் ஆயிரம் கோடி, ரெண்டாயிரம் கோடின்னு பேசிக்கிறத பார்த்தால் எல்லாருக்கும் ஏன், எதுக்குன்னு தான கேட்க தோணும். இப்ப நம்ம ப்ளூ சட்டை மாறனும் சூர்யா, சீமானை வம்புக்கு இழுத்திருக்காரு. அத என்னன்னு இதுல பார்ப்போம்.

விஜய் சினிமாவுல இருந்திட்டே அரசியலுக்கு வந்தாரு. பிப்ரவரியில அவரு தமிழக வெற்றிக் கழகம்னு தன் கட்சிய அறிவிச்சு, அப்பவே ஒப்புக்கொண்ட படங்கல முடிச்சிட்டு முழு நேர அரசியல்ல இறங்குவேன்னு சொன்னாரு.

கொஞ்ச நாளல், சென்னை, பனையூரில தன்னோட தலைமை அலுவலகத்துல தவெகவோட கட்சி கொடி, தமிழன் கொடி பறக்குதுன்னு பாட்டும் வெளியிட்டாரு. அப்ப கூட யாரும் அவ்ர பெரிசா கண்டுக்கல.

அதுக்கு அப்புறமா அக்டோபர் 27 ஆம் தேதி தவெக – வெற்றிக் கொள்கை திருவிழான்னு முதல் மா நாட்டை 8 லட்சம் பேரை அழைச்சு நடத்திக் காட்டி, அதில அக்கட்சித் தலைவர் விஜய் பேசுன பேச்சிருக்கே. அதுதான் இப்போ நாம் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள புலம்ப விட்டிருக்கு. அதிலும் சீமான் போற இடமெல்லாம் விஜய்யை விமர்சிக்க வைச்சிருக்கு.

அந்த மாநாட்டுல விஜய் கடைசில பேசறப்போ, சினிமாவுல என் கேரியரின் உச்சத்த உதறிதள்ளிட்டு, மக்களுக்காக சேவை செய்ய வந்திருக்கேன் அப்டீனு சொன்னாரு. அதை மீடியாவும் விஜய்க்கு ஒரு படத்துல நடிக்க ரூ.200 கோடிக்கு மேல சம்பளம், சொகுசா ஏசியில இருந்து, நடிச்சிக்கிட்டே சம்பாதிக்கலாம், ஆனால், மக்களுக்காக வாரிசு அரசியல்கிட்ட இருந்து மக்கள காப்பாத்த அரசியலுக்கு வந்திருக்கேன்னு எழுதுனாங்க.

அதுவை திமுகவை எதிர்த்த நாம் தமிழர் அந்தப் பேச்சுக்கு அப்புறமா, தவெக எதிர்க்க ஆரம்பிச்சாங்க. ஆனால் தவெக அவுங்க கண்டுக்கவேயில்லைன்னு சொல்றாங்க. ஆனாலும் நாதக டார்கெட் பண்ணி அடிச்சிட்டே இருக்காங்க. சமீபத்தில ரஜினியை சந்திச்ச சீமான், சந்தோசமா அவரோட நின்னு புகைப்படமும் எடுத்திக்கிட்டாரு. அது வைரலாச்சு.

தமிழகத்தைக் கலக்கும் 2000 கோடி !

செய்தியாளர் சந்திப்புல விஜய்ய சீண்டற மாதிரி, நீ 200 கோடி சம்பளத்தை விட்டுட்டு அரசியலுக்கு வந்தவன், ஆனால் நான் 2000 கோடிக்கு பேரம் பேசியும் கூட்டணிக்கு மசியாதவன் அப்பிடீன்னு பேசியிருக்காரு.

இதொருபுறம் இருக்க, சூர்யா – சிவா கூட்டணியில நவம்பர் 14 ஆம் தேதி ரிலீசான படம் கங்குவா. இப்பட ரிலீஸின் முன் புரமோசனில், பிரமாண பட்ஜெட்டுல படம் எடுத்து, அதை 11,500 ஸ்கிரீன்ல, உலகம் முழுவதும், 38 மொழிகளில் ரிலீஸ் பண்றோம், இப்படம் ரூ.2000 கோடி வசூலிக்கும்னு புரடியூசர் ஞானவேல்ராஜாவும், எல்லாரும் வாய பொளந்து பார்க்கப் போறாங்கன்னு சூர்யாவும் பேசுனாங்க.

ஆனால், கங்குவா படம் ரிலீசான முதல் நாளே நெகட்டிவ் கமெண்ட்ஸ். இதுவரை வெளியான 15 நாள்ள ரூ.60 கோடிக்கு மேல தான் வசூலே. அதுனால இப்படத்தோட கலெக்சன் ரிபோர்ட்ட ஜிஎஸ்டி ஓட போடறேன்னு ஞானவேல் ராஜா சொன்னதை வைச்சு, ஏங்க ஜிஎஸ்டி பில்லுனு கேட்டு புளூ சட்டை மாறன் டெய்லி அவரை கலாய்ச்சிட்டு வராரு.

அதேபோல, சீமான் இப்போ ரூ.2000 கோடின்னு பேசுனதயும், கங்குவா ரூ.2000 கோடி வசூலிக்கும்னு ஞானவேல் ராஜா சொன்னதயும் வைச்சு புளூ சட்டை மாறன் தமிழகத்தை கலக்கும் 2000 கோடின்னு எக்ஸ் பக்கத்துல பதிவிட்டிருக்காரு. இதைத்தான் நெட்டிசன்களும் தங்களோட கருத்துக்கள பதிவிட்டுட்டு வராங்க.

blue sattai maran
blue sattai maran


- Advertisement -spot_img

Trending News