வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சைடு கேப்பில் சில்லரைத்தனமான சேட்டை செய்யும் கோபி.. விழி பிதுங்கி நிற்கும் பாக்யாவின் குடும்பம்

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்துக்குப் பிறகு ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள தயாரான கோபி, அதற்கான வேலைகளை தடபுடலாக பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில் மகள் இனியாவையும் பள்ளியிலிருந்து அழைத்து சென்று, அவருக்கு புது துணி வாங்கிக் கொடுத்து ராதிகா வீட்டிற்கும் கூட்டி கொண்டு போகிறார். மேலும் ராதிகாவுடன் நெருங்கி பழகும் மாறும், அவருடைய நல்ல குணம் மிகவும் பிடிக்கும் என்றும் கோபி இனியாவிடம் சைடு கேப்பில் கோல் போடுகிறார்.

Also Read: ராதிகா வீட்டுக்கு இனியாவை கூட்டிட்டு வந்த கோபி.. உச்சகட்ட பரபரப்பில் பாக்கியலட்சுமி

மக்கு மாடு  இனியா, அப்பா எந்த அர்த்தத்தில் சொல்கிறார் என்பதைக் கூட புரிந்து கொள்ளாமல் மண்டைய மண்டைய ஆடுகிறார். பிறகு வீட்டிற்கு வந்து இனியா அந்த புதுத் துணியை போட்டுக் கொண்டு படிக்காமல், இல்லாத அலப்பறை எல்லாம் செய்வதால், ஜெனி அதை பாக்யா மற்றும் குடும்பத்தினரிடம் போட்டுக் கொடுக்கிறார்.

பிறகு பாக்யாவின் மாமியார் இனியாவிடம் யார் வாங்கிக் கொடுத்த ட்ரஸ் என்று கேட்க, அப்பா தான் வாங்கி கொடுத்து ராதிகா வீட்டிற்கும் அழைத்துச் சென்றார் என்று குடும்பத்தினரிடம் குண்டைத் தூக்கிப் போட்டார். கோபி ஏற்கனவே தன்னுடைய அம்மாவிடம் 2-வது திருமணத்தை பற்றி பேசி அடி வாங்கினார்.

Also Read: டிஆர்பியில் அதகளம் செய்த சன் டிவி.. பரிதாபத்திற்குரிய நிலையில் பிரபல சேனல்

ஒருவேளை ராதிகா கோபியின் கல்யாணத்திற்காக தான் இந்த புது டிரஸ்சை இனியாவிற்கு வாங்கிக் கொடுத்திருக்கிறாரா? என்ற சந்தேகம் கோபியின் அம்மாவிற்கு வருகிறது. மேலும் பாக்யாவும் கோபி செய்த துரோகத்தை மறந்துவிட்டு இனியா இப்படி அவருடன் ராதிகா வீட்டிற்கு சென்றதை நினைத்து உறைந்து போய் நிற்கிறார்.

என்னதான் பள்ளி படிக்கும் சின்ன பொண்ணான இனியாவுக்கு இன்னமும் பக்குவம் வரவில்லையே என்று அனைவரும் வருத்தப்படுகின்றனர். இருப்பினும் இனியாவிற்கு மட்டும் கோபி-ராதிகா இருவரின் திருமண விஷயம் பற்றி தெரிந்தால் நிச்சயம் அதற்கு ஒத்துக்கொள்ள மாட்டார்.

Also Read: பிக் பாஸ் நிகழ்ச்சியால் முடிவுக்கு வரும் விஜய் டிவி சீரியல்.. 300 எபிசோடுகளிலேயே மூட்டை கட்டிய இயக்குனர்

Trending News