ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அட்லி மாதிரி நானும் காப்பி அடிச்சிட்டேன்.. உண்மையை போட்டு உடைத்த 100 கோடி வசூல் இயக்குனர்

Pradeep Ranganathan: முன்பெல்லாம் சமூக வலைத்தளங்களின் புழக்கங்கள் இல்லாத காலகட்டங்களில் ஒரு படத்தின் காட்சி, இன்னொரு படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என்பதை பெரும்பாலும் அவ்வளவு எளிதாக கண்டுபிடித்து விட முடியாது. ஆனால் இப்போதெல்லாம் படம் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் அதன் கதையிலிருந்து காற்று வரை அத்தனையும் எங்கிருந்து சுடப்பட்டது என்பதை விவாத பொருளாகவே மாற்றி விடுகிறார்கள் நெட்டிசன்கள்.

இதனால் பல இயக்குனர்கள் மற்றவர்கள் கண்டுபிடித்து அசிங்கப்படுவதை விட, நாமே உண்மையை சொல்லிவிடலாம் என்று தங்களுடைய பேட்டிகளில் எந்த படத்தில் இருந்து எந்த காட்சியை காப்பி அடித்தார்கள் என்பதை முதற்கொண்டு வெளிப்படையாக சொல்லிவிடுகிறார்கள். அப்படி தான் பிரபல இயக்குனர் ஒருவர் தற்போது தன்னுடைய சூப்பர் ஹிட் படத்தின் ஒரு காட்சியை காப்பியடித்ததை ஒப்பு கொண்டிருக்கிறார்.

Also Read:அள்ளிக் கொடுத்த 100 கோடி வசூல் கிள்ளி கொடுத்த தயாரிப்பாளர்.. லவ் டுடே படத்திற்கு பிரதீப் வாங்கிய சம்பளம்

குறும்படங்கள் இயக்குவதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சயமான பிரதீப் ரங்கநாதன் தான் அந்த இயக்குனர். இவர் ஜெயம் ரவியை வைத்து கோமாளி என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஒரு பத்து வருடத்திற்குள் சமூகம் எப்படி மாறி இருக்கிறது என்பதை தன்னுடைய வித்தியாசமான கதைக்களத்தின் மூலம் சொல்லி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார். இவரிடம் தான் சமீபத்தில் ஏதாவது ஒரு படத்தின் காட்சியை காப்பி அடித்தீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது.

பிரதீப் ரங்கநாதன் ஆம் நான் காப்பி அடித்து இருக்கிறேன். கோமாளி படத்தின் ஒரு காட்சியை ஆங்கில படத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டது. எனக்கு அந்த காட்சி ரொம்பவும் பிடித்திருந்தால் யோசிக்காமல் என்னுடைய படத்தில் வைத்து விட்டேன். ஆனால் படம் பார்த்த என்னுடைய நண்பன் ஒருவர் அதை கண்டுபிடித்து விட்டார். மேலும் இதுபோன்ற செய்தது ரொம்பவே தவறு என்றும் விமர்சனம் செய்தார் என்று சொல்லி இருக்கிறார்.

Also Read:நடிகைகளை கேவலமாக விமர்சித்த பிரதீப்.. வாய்ப்பு தராததால் வம்புக்கு இழுக்கும் கோமாளி பட ஹீரோயின்.!

இப்படி ஏதாவது ஒரு காட்சியை காப்பியடித்து அது ரசிகர்கள் கண்டுபிடித்து விட்டால், படம் முழுக்க நாம் கஷ்டப்பட்ட அத்தனை காட்சிகளுமே வேறு எதிலிருந்தாவது காப்பி அடிக்கப்பட்டதாக இருக்கும் என்ற எண்ணம் வந்துவிடும். அதனால் இனிமேல் இது போன்ற வேலையை செய்யவே கூடாது என்று முடிவெடுத்ததாகவும் பிரதீப் ரொம்பவும் வெளிப்படையாக அந்த பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் இயக்குனர் அட்லி இயக்கும் பெரும்பாலான படங்களை ரசிகர்கள் எப்படியாவது எந்த படத்தில் இருந்து அவர் காப்பி அடித்தார் என்பதை கண்டுபிடித்து வைரல் ஆக்கி விடுவார்கள். மேலும் அவர் போடும் ட்வீட்டில் இருந்து அவர் மகனுக்கு வைத்த பெயர் வரைக்கும் காப்பி அடித்து தான் செய்கிறார் என்று நெட்டிசன்கள் பயங்கரமாக வறுத்து எடுத்து வருகின்றனர். இது போன்ற ஒரு நிலைமை தனக்கு வந்து விடக்கூடாது என்பதில் பிரதீப் ரங்கநாதன் ரொம்பவே உஷாராக இருந்திருக்கிறார்.

Also Read:கோடம்பாக்கத்தில் குஸ்தியை ஏற்படுத்தும் லவ் டுடே பிரதீப்.. நன்றி கடனுக்காக செய்த வேலையால் வந்த விபரீதம்

Trending News