புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

பீஸ்ட் படத்தை மிஞ்சும் பாரதி கண்ணம்மா.. இது என்னடா நெல்சனுக்கு வந்த சோதனை

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடர் தற்போது விறுவிறுப்பான கதை களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. தற்போது பாரதியின் மருத்துவமனையில் அமைச்சர் சிகிச்சைக்காக அனுமதி பெற்று இருக்கிறார். இதனால் இந்த மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் மருத்துவ பராமரிப்பு பணிக்காக கண்ணம்மா ஏற்பாடு செய்ததாக நிறைய நபர்கள் மருத்துவமனையில் புகுந்துள்ளனர். அதன் பின்பு இதை அறிந்த கண்ணம்மா, ஏதோ தவறாக இருக்கிறது என போலீஸிடம் சொல்ல முற்படும் போது முழு மருத்துவமனையையும் தீவிரவாதிகள் தங்கள் வசம் கொண்டு வருகின்றனர்.

Also Read :குடும்ப மானம் கப்பல் ஏறுதே.. கமிஷனர் ஆபீஸில் கதறி துடித்த சந்தியா

மேலும் அகிலன், அஞ்சலி, லட்சுமி ஆகியோரும் இந்த மருத்துவமனையில் சிக்கி உள்ளனர். இதை அறிந்த பாரதி போலீஸ் அதிகாரி ஒருவருடன் மருத்துவமனையில் நுழைகிறார். தீவிரவாதிகள் இவர்கள் இருவரையும் தனி அறைக்கு கொண்டு செல்கின்றனர்.

அங்கு துப்பாக்கி சூடும் சத்தம் கேட்கிறது. பாரதியை தீவிரவாதிகள் கொன்று விட்டதாக எண்ணி லட்சுமி கதறி அழுகிறார். மேலும் அங்குள்ள எல்லோருமே அதிர்ச்சியில் உறைகின்றனர். தொலைக்காட்சியிலும் இந்த செய்தி ஒளிபரப்பானவுடன் பாரதியின் குடும்பமும் பதறுகிறது.

Also Read :பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு கெட்ட நேரம் தொடங்கியாச்சு.. ஒரே பதட்டத்தில் மூர்த்தி, தனம்

ஆனால் பாரதி மற்றும் கண்ணம்மா இதிலிருந்து தப்பித்து தீவிரவாதிகளை போலீசிடம் ஒப்படைப்பார்கள். ஆனால் இந்த காட்சி அப்படியே விஜய்யின் பீஸ்ட் படத்தை காப்பியடிப்பது போல எடுத்துள்ளனர். அந்தப் படத்தில் தீவிரவாதிகள் மாலில் ஊடுருவது போல இதில் மருத்துவமனையை ஹைஜாக் செய்துள்ளனர்.

சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட் போட்டு எடுக்கப்படும் இது போன்ற காட்சிகளை சீரியல்களில் தற்போது எடுத்து வருகிறார்கள். மேலும் தன் பிள்ளைகள் இவர்கள்தான் என்று கண்டுபிடிக்க முடியாத பாரதிக்கு இந்த வேலை எல்லாம் தேவையா என்று ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். சாதாரணமாக குடும்பத்தொடராக ஒளிபரப்பாகும் சீரியலில் இது போன்ற காட்சிகள் சற்றும் தேவையில்லாத ஒன்று என பலரும் கூறுகிறார்கள்.

Also Read :ஸ்கூல் பீஸ் கூட கட்ட துப்பில்ல, ராதிகாவிடம் கெஞ்சும் கோபி.. இந்த அசிங்கத்தை நேரில் பார்த்த பாக்கியா

Trending News