சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

AR ரகுமானுக்கு பாடியதால் பழிவாங்கிய இளையராஜா.! பகிரங்கமாக உண்மையை போட்டு உடைத்த பிரபல பாடகி

Ilayaraja: சுமார் 50 ஆண்டுகளாக இசையமைப்பாளராக திரையுலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜா, இப்போதும் இளம் இசையமைப்பாளர்களுடன் சரிக்கு சரி போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார். இவரைக் குறித்த நெகட்டிவ் விமர்சனங்கள் தற்போது சோசியல் மீடியாவில் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருக்கிறது. 90களில் இசைஞானிக்கு போட்டியாக உருவெடுத்தவர் தான் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான்.

இவர் திரை உலகிற்கு அறிமுகமான முதல் படமான ரோஜா படத்தில் பாடிய குற்றத்திற்காகவே, இளையராஜா தன்னால் வளர்ந்த பாடகிக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஏற்றிவிட்ட ஏணியவே எட்டி உதைத்திருக்கிறார். மீரா என்ற படத்தில் மின்மினி என்ற பாடகியை அறிமுகம் செய்திருந்தால் இளையராஜாவின் பல பாடல்கள் அவரது குரலில் வெளிவந்தன.

Also Read: அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 இசையமைப்பாளர்கள்.. ஆஸ்கர் நாயகனையே ஓவர் டேக் செய்யும் அனிருத்

அதன்பிறகு ஒரு கட்டத்தில் மின்மினியை ஏஆர் ரகுமான் ‘ரோஜா’ படத்தில் சின்ன சின்ன ஆசை என்ற பாடலை பாட வைத்து அவரை உலகறிய செய்தார். அதன்பின் மின்மினி வாழ்க்கை ஏறுமுகத்தில் சென்றது. தற்பொழுது அவர் ஒரு பேட்டியில், ஏஆர் ரகுமானின் இசையில் பாடிய குற்றத்திற்காகவே 1992ல் இருந்து தற்போது வரை இளையராஜா எனக்கு ஒரு பாடல் வாய்ப்பை கூட கொடுக்கவில்லை.

முயற்சி செய்தும் எந்த முக்கியத்துவம் இல்லாததால் நான் முயற்சி செய்வதை விட்டு விட்டேன், எனக்கு அது ஒரு மன வருத்தமாக இருந்து வருகிறது. இளையராஜாவிற்கு இந்த கோபம் இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்த விஷயத்தை தற்போது மின்மினி பகிர்ந்துள்ளார். தற்போது மின்மினி மலையாள டிவி ஷோவில் கலந்து கொண்டு இளையராஜாவை குறித்துவேதனை தெரிவித்திருக்கிறார்.

Also Read: தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் 5 இசையமைப்பாளர்கள்.. இசையால் அடிமையாக்கிய யுவன்

அதாவது சின்ன சின்ன ஆசை பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனதால் இளையராஜா அவருக்கு வாய்ப்பு தரவில்லை என பகிரங்கமாக குற்றம் சாட்டி இருக்கிறார். ‘வேறு இடத்தில் பாட தொடங்கியதால் நீ இனிமேல் என்னுடைய இசையில் பாடக்கூடாது, எங்கு சென்றாயோ அங்கேயே செல்’ என இளையராஜா அவரிடம் காட்டமாக கூறியதாக மின்மினி தெரிவித்துள்ளார்.

இதில் வேறு இடம் என இளையராஜா குறிப்பிட்டது ஏஆர் ரகுமானை தான். ஒரு பாடல் ரெக்கார்டிங் செய்து கொண்டிருக்கும் போது இளையராஜா மின்மினியை இப்படி திட்டி இருக்கிறார். அந்த சமயத்தில் தன்னுடன் பாடிக்கொண்டிருந்த பாடகர் மனோ தான் தன்னை சமாதானப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு இளையராஜா அவரை அழைக்கவே இல்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.

Also Read: ஏஆர் ரகுமானை யூஸ் பண்ணிய இளையராஜா.. காலம் கடந்தும் தெரியாமல், கிடைக்காத அங்கீகாரம்

ஒரு கட்டத்திற்கு பின்னர் சினிமாவில் பட வாய்ப்பு இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த மின்மினி, இறுதியாக மலையாளத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான மிலி என்ற படத்தில் பாடியிருந்தார். என்ன தான் திறமை இருந்தாலும் அதை ஊக்குவிப்பவர்கள் ஊக்குவிக்காமல் இருக்கும்போது அந்த திறமைக்கு மதிப்பில்லாமல் போய்விடுகிறது என்று சமீபத்திய பேட்டியில் மின்மினி வேதனையுடன் பேசி இருக்கிறார்.

Trending News