புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பிரபல நடிகர் மீது தீராத காதல்.. கணவரையும் இழந்த பாடகியின் சீக்ரட்டை உடைத்த பயில்வான்

Bayilwan Ranganathan: சினிமாவில் வதந்திகள், கிசுகிசுக்கள் என்பது இயல்பாக நடக்கும் ஒன்று. சில நேரங்களில் இந்த வதந்திகளை உண்மையாக மாறுவதும் உண்டு. சமீப காலமாக பயில்வான் ரங்கநாதன் பல நடிகர்கள் மற்றும் நடிகைகளின் சொந்த வாழ்க்கையில் நடந்த ஒரு சில விஷயங்களை யூடியூப் சேனல் மூலம் ரசிகர்களிடம் பகிர்ந்து வருகிறார். அப்படி தான் தற்போது ஒரு பாடகியின் காதல் கதையும் வெளியில் வந்திருக்கிறது.

தன்னுடைய வித்தியாசமான குரல் வளத்தின் மூலம் தனித்துவமான பின்னணிப் பாடகியாக இருந்தவர் சுசித்ரா. பாடலோடு, பல படங்களுக்கு பின்னணி குரலும் கொடுத்திருக்கிறார். எந்த அளவுக்கு புகழின் உச்சத்தில் இருந்தாரோ தற்போது எங்கே இருக்கிறார் என்று தெரியாத அளவிற்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார். மேலும் இவர் மனநிலை சரியில்லாமல் சிகிச்சை எடுத்துக் கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகின.

Also Read:காஞ்ச மாடு போல் நடிகை மீது பாய்ந்த இயக்குனர்.. மூன்றே மாதத்தில் வாந்தி எடுத்த ஹீரோயின்

சுசித்ராவின் மார்க்கெட் மொத்தமாக சரிந்தது அவர் சுசி லீக்ஸ் என்ற ஹேஷ் டேக் மூலம் பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகளின் பிரைவேட் போட்டோ மற்றும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த பிறகு தான். தமிழ் சினிமாவில் இது மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. பின்னர் சிறிது காலம் கழித்து தன்னுடைய ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு விட்டதாக அவர் சொல்லியிருந்தார்.

சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் முதன் முதலில் நடிகர் தனுஷ் தன்னை வன்கொடுமைப்படுத்தியதாகவும், அதனால் ஏற்பட்ட காயங்கள் இது என்று புகைப்படங்களை பகிர்ந்து தான் இதை ஆரம்பித்திருந்தார். தற்போது பயில்வான் ரங்கநாதன் சுசித்ரா மற்றும் தனுசுக்கு நெருங்கிய உறவு இருந்ததாகவும், சுசித்ரா அவர் மீது காதல் கொண்டு பழகியதாகவும் சொல்லி இருக்கிறார்.

Also Read:மனைவி இருக்கும் போதே நடிகைக்கு தாலி கட்டிய வாரிசு நடிகர்.. நான்கே மாதத்தில் முடிவு கட்டிய அப்பா!

இருவரும் தினமும் சந்தித்து பழகி வந்த நேரத்தில் ஒரு கட்டத்தில் அது எல்லாமே நிறுத்தப்பட்டதால், சுசித்ராவால் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் இப்படி எல்லாம் செய்ததாகவும், தனுஷின் மீது இருந்த தீரா காதலால் தான் அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டதாகவும் சொல்லி இருக்கிறார். யாரடி நீ மோகினி திரைப்படத்தில் தனுஷின் நண்பனாக நடித்த கார்த்திக் தான் சுசித்ராவின் கணவர் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு கார்த்திக் சுசித்ராவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர எவ்வளவோ முயற்சி செய்திருக்கிறார். ஆனால் சுசித்ரா மனநிலை பாதிக்கப்பட்டதோடு, மதுப்பழக்கத்திற்கும் அடிமையாகி இருந்ததால், ஒரு கட்டத்தில் கார்த்திகால் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவரை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணை மணந்திருக்கிறார்.

Also Read:கணவனின் கள்ளக்காதல் தெரிந்ததால் முத்தக் காட்சியில் அதிக நெருக்கம் காட்டிய நடிகை.. இதெல்லாம் ஒரு பொழப்பா!

Trending News