ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி என்ன தெரியுமா?. பெருசாகி ஊதி கெடுக்கும் நெட்டிசன்கள்

Vijay in Kutty Story Leo Success Meet: லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த மாதம் 19 ஆம் தேதி வெளிவந்த லியோ படம் பல எதிர்பார்ப்புகளையும் தாண்டி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனாலும் வசூல் அளவில் எவ்வித சரிவையும் பார்க்காமல் 550 கோடிக்கு மேல் வசூல் சாதனையை பெற்று வருகிறது. ஆரம்பத்தில் இப்படத்திற்கு சர்ச்சைகளும், எதிர்ப்புகளும் வந்த நிலையில் அதையெல்லாம் தகர்த்து எறிந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

இதில் என்னதான் ரசிகர்களை குஷி படுத்திருந்தாலும் அவர்கள் அதிக அளவில் எதிர்பார்ப்பை வைத்து காத்துக் கொண்டிருந்த ஒரு விஷயம் இப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை தான். ஏனென்றால் வழக்கமாக இந்த மாதிரி நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டால் அவர் பாணியில் ஒரு குட்டி ஸ்டோரி சொல்லி ரசிகர்களின் மனதை குஷிபடுத்திருப்பார். அந்த ஒரு விஷயம் மிஸ் ஆனதால் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தார்கள்.

ஆனால் அதையெல்லாம் சரி செய்யும் விதமாக நேற்று சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் லியோ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் விஜய், த்ரிஷா, லோகேஷ், மிஸ்கின், கௌதம் மேனன், அர்ஜுன், மன்சூர் அலிகான், மரியம் ஜார்ஜ், ஜனனி, மடோனா செபஸ்டின் மற்றும் படக்குழுவினர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

Also read: பாக்ஸ் ஆபிஸை மிரட்டிய விஜய்யின் கடைசி 5 படங்கள்.. தடுமாறினாலும் ரெக்கார்ட் பிரேக் செய்த லியோ

அப்பொழுது நிகழ்ச்சிக்கு வந்த பலரும் அவர்களுடைய உரையாடல்களை கொடுத்தார்கள். இவர்களை தொடர்ந்து கடைசியில் விஜய்யும் பேசினார். அத்துடன் வழக்கம்போல் அரங்கத்தையே அதிர வைக்கும் அளவிற்கு இவருடைய ஃபேவரைட் ஆன குட்டி ஸ்டோரியை சொல்லி காக்கா கழுகு கதைக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். ஒரு காட்டுல யானை, புலி, மான், காக்கா, கழுகு என்று நிறைய மிருகங்கள் இருந்ததாம். அங்கே வேட்டையாடுவதற்கு இரண்டு பேர் போறாங்க.

ஒருத்தர் வில் அம்பு இன்னொருவர் ஈட்டி கொண்டு போகிறார். வில் அம்பு வைத்திருக்கிறவர் முயலை குறி வைக்கிறார். ஈட்டி வச்சி இருக்குறவர் யானையை குறி வைக்கிறார். ஆனால் வில்லம்பு வைத்திருப்பவர் மட்டுமே முயல பிடிச்சுட்டு வந்தாரு. இதுல யாரு பெரிய மாசு தெரியுமா? யானையை குறி வச்சவர் தான். ஏனென்றால் எப்போதுமே பெரிய விஷயங்களுக்கு தான் ஆசை படனும்.

ஆசைகள் கனவுகள் காண்பதில் என்ன தவறு இருக்கிறது. ஒரு வீட்டில் குட்டி பையன் அப்பாவுடைய டிரசை போடணும்னு ஆசைப்படுவான். ஆனா அது அவனுக்கு தெரியும் பெரிய ட்ரெஸ் என்று. இருந்தாலும் ஆசைப்பட்டு அதை நிறைவேற்றிக் கொள்வான். அவனை பொறுத்தவரை அப்பா மாதிரி ஆகணும்னு கனவு காண்கிறான் அவ்வளவுதான்.

அதனால எப்போதுமே ஆசையை பெருசாக வைத்துக் கொள்ளுங்கள். ஸ்மால் ஏம் இஸ் கிரைம் என்று அப்துல் கலாம் சொன்னதை சொல்லி இலக்குகள் பெரிதாக இருக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டி இருக்கிறார். ஆனால் இவர் சொன்ன இந்த ஸ்டோரியை வைத்து நெட்டிசன்கள் எந்த அளவுக்கு இதை ஊதி கெடுக்க முடியுமோ அதை தரமாக செய்து வருகிறார்கள்.

Also read: லியோ வெற்றி விழாவில் உங்களுக்கு வச்சிருக்கேன்.. விஜய் பேசப்போகும் அரசியல்

Trending News