Samantha – Nagachaitanya: நட்சத்திர ஜோடிகளில், சில ஜோடிகளே ரசிகர்களால் அதிகமாக தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்படுவார்கள். அவர்களைப் போல ஒரு பார்ட்னர் நமக்கு கிடைக்க வேண்டும் என்பது கூட ரசிகர்களின் மிகப்பெரிய ஆசையாக இருக்கும். அஜித் ஷாலினி, சூர்யா ஜோதிகா வரிசையில் அதிகமாக கொண்டாடப்பட்ட காதல் ஜோடி தான் சமந்தா நாக சைதன்யா. யார் கண் பட்டதோ இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள்.
அவர்களுடைய பிரிவு சொந்த குடும்பத்திற்கு கொடுத்த கஷ்டத்தை விட, அவர்களுடைய ரசிகர்களுக்கு ரொம்ப கஷ்டத்தை கொடுத்தது என்று கூட சொல்லலாம். தனியாக பிரிந்த இவர்கள் தங்களுடைய தொழிலில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். நாக சைதன்யா உடனான திருமணம் முறிவிற்கு பிறகு கூட சமந்தாவிற்கு வாய்ப்புகள் அதிகமாகவே கிடைத்தது. நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தார்.
Also Read:முகத்தை வெளியில் காட்ட முடியாமல் தவிக்கும் சமந்தா.. காரணத்தைக் கேட்டு பதறும் திரையுலகம்
நாக சைதன்யாவும் அடுத்தடுத்து பட வாய்ப்புகளில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் இவர் யாருடன் நடித்தாலும் அந்த நடிகைகளுடன் அதிகமாக கிசுகிசுக்கப்பட்டார். சமந்தா இதுபோன்ற வதந்திகளுக்கு செவி கொடுக்காமல் அவருடைய வேலையில் பிஸியாக இருந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக சமந்தாவிற்கு மையோசைட்டிஸ் என்னும் தோல் அழற்சி நோய் ஏற்பட்டது. அதன் பின்னர் சமந்தாவின் சொந்த வாழ்க்கை மற்றும் சினிமா வாழ்க்கை இரண்டுமே பாதிக்கப்பட்டது.
சிகிச்சை எடுத்துக் கொண்டே சினிமாவில் நடித்த வந்த சமந்தாவால் உடல் நிலையை சமாளிக்க முடியாமல் முழு நேர சிகிச்சை எடுத்துக் கொள்வதாகவும், அதனால் சினிமாவில் இருந்து கொஞ்சம் காலம் ஓய்வெடுப்பதாகவும் அறிவித்திருந்தார். அவருக்கு சமீபத்தில் ரிலீசான படம் தான் குஷி. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா உடன் சமந்தா கொஞ்சம் ஓவர் நெருக்கம் காட்டி நடித்ததால் அடுத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற வதந்தி கூட வந்தது.
இது போன்ற வதந்திகளுக்கு எல்லாம் முடிவு கட்டும் படி சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போட்டோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அது புதிதாக எடுக்கப்பட்ட போட்டோ இல்லை. நாக சைதன்யா உடனான பிரிவிற்கு பிறகு அவர் சம்பந்தப்பட்ட எல்லா போட்டோக்களையும் டெலிட் செய்த சமந்தா, அதில் திருமணத்தின் போது இருவரும் நெருக்கமாக எடுத்த போட்டோ ஒன்றை அன் அர்ச்சிவ் செய்திருக்கிறார்.
சமந்தா மீண்டும் பதிவு செய்திருக்கும் புகைப்படம்
![Samantha insta post](https://www.cinemapettai.com/wp-content/uploads/2023/09/Samantha-insta-post.webp)
அந்த போட்டோவுக்கு சமந்தாவின் ரசிகர்கள் நீங்கள் இருவரும் விரைவில் இணைய வேண்டும் என கமெண்ட் செய்து வருகிறார்கள். சமந்தா மீண்டும் இந்த போட்டோவை பதிவிட்டு இருப்பது அவர் இன்னும் நாக சைதன்யாவை மறக்கவில்லை என்பதை காட்டுகிறது. மேலும் இவர்கள் இருவரும் இணையவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.
Also Read:2வது திருமணத்திற்கு தயாரான நாக சைதன்யா.. நாசுக்காக பதிலளித்த சமந்தா