திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஒரு பாடலுக்கு 15 கோடி செலவு செய்த அட்லீ.. லியோ, கங்குவா ஸ்டைலில் உருவாக்கிய ஜவான் பாடல்

Jawan: பாலிவுட் சினிமாவை தாண்டி ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் தான் ஷாருக்கானின் ஜவான். அட்லீ இயக்கத்தில் பல வருடங்களாக உருவாகி வரும் இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி போன்ற தென்னிந்திய பிரபலங்களும் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது.

இதை தொடர்ந்து சென்னையில் ஐந்து நாட்கள் ஜவான் படத்தின் ஒரு பாடல் எடுக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக இப்போது பெரிய நடிகர்களின் படங்களில் பாடலுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதே போல் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ படத்தில் 2000 கலைஞர்கள் வைத்த ஒரு பாடல் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

Also Read : விஜய்யா, விஜய் சேதுபதியா உண்மையை உளறிய ஜவான் ஸ்டண்ட் மேன்.. அட்லீயின் கோபத்தை சம்பாதித்த பைட்டர்

இடைத்தொடர்ந்து சூர்யாவின் கங்குவா படத்திலும் இதே போன்ற கூறப்பட்டது. அதேபோல் ஜவான் படத்திலும் இப்போது ஒரு பாடலுக்கு மட்டும் 15 கோடி செலவு செய்து இருக்கிறார் அட்லீ. ஆயிரத்திற்கும் அதிகமான பெண்களை வைத்து ஜிந்தா பந்தா என்ற பாடல் 15 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பாடலுக்கு சோபி நடனம் அமைத்துள்ளார். மேலும் ஹைதராபாத், பெங்களூரு, மதுரை மற்றும் மும்பையில் இருந்து 1,000 நடனக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு இந்த பாடல் எடுக்கப்பட்டிருக்கிறது. பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த பாடலில் ஷாருக்கானும் நடனம் ஆடி உள்ளதாக தயாரிப்பு தரப்பில் இருந்து தகவல் வெளியாகி இருக்கிறது.

Also Read : அட்லீயை மிஞ்சிய மடோன் அஸ்வின்.. லிஸ்ட் போட்டு புட்டு புட்டு வைத்த ப்ளூ சட்டை மாறன்

இந்த பாடலுக்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். மேலும் ஜவான் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் மிக விரைவில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாக இருக்கிறது. அந்தப் பாடல் ஜிந்தா பந்தா பாடலாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.

ஆனாலும் ஒரு பாடலுக்கு அட்லீ 15 கோடி செலவு செய்துள்ளது பேர் அதிர்ச்சியாக தான் இருக்கிறது. ஏற்கனவே ஒரே படத்தை மூன்று நான்கு வருடங்கள் உருட்டி ஷாருக்கானின் பாதி பணத்தை கரைத்து விட்டார். இப்போது ஒரு பாடலுக்கே இவ்வளவு செலவு செய்துள்ள நிலையில், பாடல் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Also Read : ரிலீஸ் தேதியுடன் வெளிவந்த விஜய் சேதுபதியின் ஜவான் பட போஸ்டர்.. ஷாருக்கானுக்கு வில்லனா சும்மாவா

Trending News