சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

Ilaiyaraja: வாயுள்ள புள்ள எங்க போனாலும் பொழச்சுக்கும்.. வைரமுத்து பற்றி பேசிய கங்கை அமரனுக்கு காட்டமான பதிலடி

‘ கோழி வந்ததா, இல்லை முதலில் முட்டை வந்ததா’ இந்த கேள்விக்கு நம்மால் இன்னும் விடை சொல்ல முடியவில்லை. அப்படி இருக்கும் போது திடீரென வந்த பாட்டு பெருசா, இசை பெருசா என்று நம்ம கிட்ட பஞ்சாயத்து பண்ணா என்னதான் பண்ண முடியும்.

திருப்பாச்சி படத்துல நல்ல ஒரு குத்து மெட்டுக்கு ‘ அப்பன் பண்ண தப்புல ஆத்தா பெத்த வெத்தல விளைஞ்சி இருக்குடா’ என்று இயக்குனர் பேரரசு வரிகள் எழுதியிருப்பார். இந்த பாட்டு வரிகளை நாம எந்த கணக்குல சேர்த்துக்க முடியும்.

இசை நல்லா இருந்து வரிகள் எடுபடாமல் போனாலும் தோல்விதான், பாடல் வரிகள் சூப்பராக இருந்து இசை எடுபடாமல் போனாலும் தோல்விதான். நாம் பிரமித்து பார்த்த மூத்த கலைஞர்கள் இப்படி ஒரு பஞ்சாயத்தை கூட்டி இருப்பது நமக்கே தர்ம சங்கடமாகத்தான் இருக்கிறது.

சமீபத்தில் பாடல் காப்புரிமை வழக்கு ஒன்றை இளையராஜா கோர்ட்டில் தொடுத்திருந்தார். அதை தொடர்ந்து ஒரு பட விழாவில் வைரமுத்து இளையராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒரு கருத்தை பேசி இருந்தார். இரண்டு பேரும் அந்த காலத்து ஜிகிரி தோஸ்துகள்.

‘ இது ஒரு பொன்மாலைப் பொழுது’ இந்தப் பாட்டு இவர்களுடைய நட்புக்கு சாட்சி. ஏதோ ஒரு பணக்கசப்பில் இருவரும் பிரிந்து விட்டார்கள். அதன் பின்னர் கிடைக்கும் மேடைகளில் எல்லாம் ஒருவரை ஒருவர் தாக்கி பேசுவதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கங்கை அமரனுக்கு காட்டமான பதிலடி

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் வைரமுத்து பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன் என்ற பெயரில் கங்கை அமரன், வைரமுத்துவின் வாழ்க்கை நாங்கள் போட்ட பிச்சை என்று சொல்லிவிட்டார். உயர்ந்த இடத்தில் இருக்கும் இது போன்ற கலைஞர் பேசுவதற்கு முன் ஆயிரம் தடவை யோசித்து இருக்கலாம்.

சமீபத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கேபி ராஜன் இடம் கங்கை அமரனின் கருத்து குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராஜன், வைரமுத்து திறமையானவர், எங்கு போனாலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும்.

அவரை இளையராஜா தான் வளர்த்து விட வேண்டும் என்ற எந்த அவசியமும். இல்லை அப்படி பார்த்தால் இளையராஜாவை வளர்த்து விட்டதே தயாரிப்பாளர்கள் தானே. பஞ்ச அருணாச்சலம் வாய்ப்பு கொடுத்ததால் தான் இளையராஜா என்று ஒருத்தர் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

அதற்காக கங்கை அமரன் போன்று நாங்கள் ஏதாவது பேச முடியுமா. இளையராஜாவுக்கு பேராசை பிடித்து விட்டது. அதனால் தான் இது போன்ற பிரச்சனைகளை உருவாக்கி வருகிறார் என ராஜன் பதில் சொல்லி இருக்கிறார்.

Trending News