சமீபகாலமாக விஷாலுக்கு எங்கு திரும்பினாலும் பிரச்சினைதான். பண மோசடி, படப்பிடிப்பிற்கு தாமதமாக வருவது, இயக்குனர்களுடன் மோதல் என இவர் மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழுந்து கொண்டே இருக்கிறது. இன்னிலையில் விஷாலின் மேனேஜர் ஹரிகிருஷ்ணன் அவசர அவசரமாக போலீஸ் ஸ்டேஷனில் ஒரு கம்ப்ளைன்ட் செய்திருக்கிறார்.
சென்னை அண்ணா நகரில் இருக்கும் விஷாலின் வீட்டில் மீது, சிவப்பு நிற காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஆவேசமாக கற்களை வீசியுள்ளனர். இதனால் ஜன்னல், கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இந்த சம்பவம் நடக்கும்போது விஷால் அந்த வீட்டில் இல்லை. வெளியூரில் படப்பிடிப்பில் இருந்திருக்கிறார்.
Also Read: விஷாலை வளர்த்துவிட்ட 5 படங்கள்.. ஓஸ்ட் ஆன ஆட்டிட்யூட்
இது விஷாலால் மிகவும் பாதிக்கப்பட்டவர்களின் வேலையாகத்தான் இருக்கும் என கருதப்படுகிறது. ஆனால் கம்ப்ளைன்ட் செய்ததில் ஒரு தப்பு இருக்கிறது. கடந்த 26-ம் தேதி கடத்தப்பட்டதாக கம்ப்ளைன்ட் செய்துள்ளனர். ஆனால் சிசிடிவி ஆதாரத்தில் 27-ம் தேதி யாரோ வந்த கற்களை வீசியது தெரிகிறது.
இதில் தான் மர்மம் இருக்கிறது. இவ்வாறு போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்தால் போதும். அவர்களை யார் கல் வீசியது கண்டுபிடிப்பார்கள். அதை விட்டுவிட்டு விஷாலேஒரு செட்டப் செய்து அடுத்த நாள் இருக்கும் ஆதாரத்தை கொடுத்து தில்லுமுல்லு வேலை இதிலும் செய்திருக்கிறார் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.
Also Read: ஏமாற்றுகிறதா நடிகர் சங்கம்? நாசர், கார்த்திக், விஷாலுக்கு வலுக்கும் எதிர்ப்பு
ஏற்கனவே AAA படத்திற்காக சிம்புவுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்ட மாதிரி இப்போது விஷால் அதேபோன்று பிரச்சினை செய்துக் கொண்டிருக்கிறார். பெரும்பாலும் ஷூட்டிங் போகாமல் படத்தின் பட்ஜெட்டை உயர்த்துவதுடன், கோடிக்கணக்கில் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.
விஷாலிடம் இதைப் பற்றி யாரும் கேட்பதில்லை. ஏனென்றால் பெரும்புள்ளி ஒருவரின் பெயரைச் சொல்லி தப்பித்து விடுகிறார். மேலும் அரசியல் வாரிசு என் நண்பர் என்றும் சொல்லி அவர் மீது சொல்லப்படும் எல்லாம் குற்றங்களிலிருந்து எஸ்கேப் ஆகிவிடுகிறார். அதேபோல் போலீஸ் கம்ப்ளைன்ட்னிலும் இதுபோன்று தில்லு முல்லு செய்திருப்பது, அவருக்கு இருக்கும் பண, ஆள் பலத்தை காட்டுகிறாரா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
Also Read: விஷாலுக்கு ஒரு நியாயம், சிம்புவுக்கு ஒரு நியாயமா.? உங்க அட்டகாசத்துக்கு ஒரு முடிவே இல்லையா