ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

கதை கேட்டு ஆச்சரியப்பட்டு உறைந்து போன கமல்.. இயக்குனருக்கு உடனே ஆரம்பிக்க போட்ட கட்டளை

விக்ரம் படம் வெற்றிக்கு பின்னர் உலக நாயகன் கமலஹாசனின் மார்க்கெட் பன் மடங்கு அதிகரித்துள்ளது. முதலில் படங்களை தயாரிப்பதிலும் அரசியலிலும் ஆர்வம் காட்டிக்கொண்டிருந்த கமல், இப்போது விக்ரம் படத்திற்கு பிறகு நடிப்பதில் கவனம் செலுத்தியுள்ளார். இதற்காக கமல் அடுத்தடுத்து 5 இயக்குனர்களின் படங்களில் நடிக்க உள்ளார்.

இப்போது ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் கமல், அடுத்தபடியாக எச் வினோத்திடமும் கதை கேட்டு வைத்திருக்கிறார். இந்தப் படத்தை ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்க உள்ளது. இதைத்தொடர்ந்து மணிரத்தினத்தின் படத்திலும் கமல் நடிக்க உள்ளார். அடுத்தபடியாக பா. ரஞ்சித் படத்திலும் வெற்றிமாறன் படத்திலும் கமல் அடுத்தடுத்து நடிக்க உள்ளார்.

Also Read: 2022-ல் சிறந்த டாப் 5 ஹீரோஸ்.. பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய ஏஜென்ட் விக்ரம்

இப்படி கைவசம் 5 இயக்குனர்களின் படத்தில் நடித்த ஒத்துக்கொண்ட கமல், இந்தியன் 2 படத்திற்கு பிறகு அஜித்தின் அஸ்தான இயக்குனரிடம் கதையை கேட்ட பிறகு அவருடைய படத்தில்தான் முதலில் நடிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்.

இதனால் துணிவு படத்தை முடித்து கமல் படத்தை தொடங்க இருக்கிறார் எச் வினோத் என்று செய்திகள் வெளிவந்தன. ஆனால் அதற்கு முன் கொஞ்சம் ரிலாக்ஸாக ஒரு படம் பண்ண வேண்டும் என்று யோகிபாபு வைத்து படம் இயக்கப் போகிறார் என்று செய்திகள் தற்போது வந்துள்ளன.

Also Read: அடுத்தடுத்த கமலுடன் கூட்டணி போடும் 5 இயக்குனர்கள்.. பல 100 கோடி முதலீடு செய்ய காத்துக்கிடக்கும் தயாரிப்பாளர்கள்

எதற்காக ரிலாக்சாக யோகிபாபு வைத்து ஒரு படம் பண்ணவேண்டும் என்று யோசித்த நமக்கு முக்கியமான காரணம் கிடைத்திருக்கிறது. வினோத் கமல் வைத்து எடுக்கும் படத்தை கமலிடம் சொல்லும் போது கமல், ‘என் சினிமா வாழ்க்கையில் இப்படி ஒரு கதையை அதுவும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதையை நான் கேட்டதில்லை’ என்று மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

அதனால் உடனே ஆரம்பிக்க கமல் கூப்பிட்டு இருக்கிறார் என்பதை வினோத்திடம் தெரியப்படுத்தி இருக்கிறார். ஆனால் இந்த படத்தை பண்ண மூளை சம்பந்தமாக நிறைய உழைக்க வேண்டும். அதனால் ரிலாக்சாக யோகி பாபு இப்படத்தை முடித்துவிட்டு வருகிறேன் என்று கூறியிருக்கிறார் வினோத்.

Also Read: டென்ஷனாவே வேலை பார்த்து போர் அடிச்சிடுச்சு.. கமலுக்கு முன் ரிலாக்ஸாக ஒரு கூட்டணி போட போகும் வினோத்

Trending News