வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

அடப்பாவி.. ஏண்டா இப்படிலா பண்ணுறீங்க.! பாவம் சாய் பல்லவி-ன்னு நெனச்சு ரசிகர்கள் படுத்திய பாடு

கடந்த வாரம் தீபாவளிக்கு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள திரைப்படம் சிவகார்த்திகேயனின் அமரன். இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து நாட்டிற்காக உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்டத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார்.

இந்த படத்திற்கு ஒரு புறம் பாராட்டுக்களும், கண்டனங்களும் வந்த வண்ணமாக உள்ளது. ஒருபக்கம் நடிப்பு அபாரம் என்றும், மறுபக்கம் ஜாதியை ஏன் குறிப்பிடவில்லை என்றும், பிரச்சனை வந்த வண்ணமாக உள்ளது. இன்னும் ஒரு சிலர், ஒரு படி மேல் ஏறி, இதில் CRPF வீரர்கள் அசிங்கப்படுத்த பட்டுள்ளனர், இஸ்லாமியர்களுக்கு எதிராக படம் இருக்கிறது, மத நல்லிணக்கத்தை கெடுப்பது போல் இருக்கிறது என்று ஏகப்பட்ட பஞ்சாயத்து இந்த படத்தை சுற்றியுள்ளது.

இந்த நிலையில், நடிகை சாய் பல்லவி இந்த படத்தில் தனது அசாதாரண நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ஏற்கனவே சாய் பல்லவியை பிடிக்காதவர்கள் என்று யாரும் கிடையாது. இந்த நிலையில், இவருக்கு இந்த படத்தின் மூலம் ரசிகர் பட்டாளங்கள் அதிகரித்து விட்டன.

அட பாவமே! பாவம் அந்த பையன்

இந்த நிலையில் அமரன் படத்தில் எப்படி சிவகார்த்திகேயன் சாய் பல்லவி போட்டோவை தனது வாலட்டில் வைப்பாரோ, அதே போல தான் ரசிகர்களும் வைத்து வருகின்றனர். மேலும் சாய் பல்லவி அடுத்து பாலிவுட் படங்களிலும் கமிட் ஆகி பிசி நடிகையாக வளம் வருகிறார்.

இப்படி இருக்க, இந்து ரெபேக்கா வர்கீசாக நடித்த சாய் பல்லவி சிவகார்த்திகேயன் தனது தொலைபேசி எண் பகிர்வது போல எடுக்கப்பட்ட கட்சியில் ஒரு நம்பர் வரும். அந்த நம்பர்-க்கு தற்போது ரசிகர்கள் கால் செய்து, பாராட்டு மழையை பொழிந்து வருகின்றனர்.

அது வேற ஒரு மாணவனின் நம்பர் என்று தெரியாமல், கால்ஸ், வாய்ஸ் மெசேஜஸ், வந்த வண்ணமாக உள்ளது. இதனால் என் நிம்மதியே போச்சு. என்று அந்த மாணவன் தற்போது புலம்பி வருகிறார். மேலும் இது தொடர்பாக பல முறை போலீசில் புகைரளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லையாம். அதுமட்டுமின்றி, படக்குழுவினருக்கு தெரிவித்தும், ரெஸ்பான்ஸ் இல்லை என்று வேதனை தெரிவித்து வருகிறார். பாவம் அந்த பையன்!

Trending News