வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பன்னீரில் குளித்து, தங்கத்தட்டில் சாப்பிட்டவருக்கே அப்படி ஒரு நிலைமை.. இதில் மன்சூர் எல்லாம் ஜுஜிபி

Mansoor Alikhan: அந்த காலத்தில் பிரபலமான நடிகர் ஒருவர் பன்னீரில் வாய் கொப்பளித்து, தங்கத்தட்டில் சாப்பிட்டு  சினிமாவில் வலம் வந்திருக்கிறார். அப்படிப்பட்ட இவருடைய முன் கோபத்தினால் கொலை கேசில் மாட்டி சிக்கி சின்னா பணமாக சீரழிந்து இருக்கிறார். கடைசியில் இவருடைய இறுதி காலத்தில் பல கஷ்டங்களுக்கு ஆளாகி மரணமடைந்திருக்கிறார்.

அப்படிப்பட்ட இவர் வெறும் 14 படங்கள் மட்டுமே நடித்திருக்கிறார். இருந்தாலும் இவருடைய படங்கள் அனைத்துமே மக்களுக்கு பிடித்துப் போனதால் புகழின் உச்சிக்கு சென்று மிகவும் பிரபலமாய் இருந்திருக்கிறார். அவர் யார் என்றால் தியாகராஜ பாகவதர். அந்த காலத்தில் அதிக சம்பளம் வாங்கிய நடிகராக இவர் இருந்தார். இருந்தாலும் கடைசியில் ஒன்னும் இல்லாமல் கஷ்டத்தில் தான் இவருடைய உயிர் பிரிந்திருக்கிறது.

அதற்கு காரணம் இவர் செய்த ஒரு கொலை. அதாவது இவரை பற்றி அவதூறாக எழுதிய பத்திரிக்கையாளர் நிறுவனத்திடம் வாக்குவாதம் ஏற்பட்டு கடைசியில் கொலை செய்யும் அளவிற்கு தியாகராஜ பாகவதர் போய்விட்டார். இதனால் இவருக்கு கடுங்காவல தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பின் வெளியே வந்த இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைந்துவிட்டது.

Also read: மன்சூர் அலிகான் போல் வம்பில் சிக்கிய ரஜினி.. உங்க வயசுக்கு இப்படி பேசலாமா தலைவரே.!

இதனால் சொத்து வசதி எல்லாத்தையும் இழந்து தினமும் கஷ்டப்படும் அளவிற்கு பரிதாபமாக போய்விட்டார். கையில் பணமும் பதவியும் இருக்கும் பொழுது ஆடின ஆட்டமெல்லாம் கடைசியில் ஒன்னும் இல்லாமல் போய்விட்டது. கடைசியில் காசு இழந்து மரியாதையை இழந்து உயிரை விட்டிருக்கிறாய்.

இறக்கும் தருவாயில் என்னுடைய உடம்பை மட்டும் எந்த காரணத்தைக் கொண்டும் சினிமாக்காரர்களுக்கு மட்டும் காட்டி விடாதீர்கள் என்று கெஞ்சி கேட்டிருக்கிறார். இவரை போல தான் தற்போது முன் கோபத்தினாலும், தெளிவான பேச்சும் இல்லாததால் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி தவித்து வருகிறார் மன்சூர் அலிகான்.

ஒரு காலத்தில் சிறந்த வில்லனாக நடித்து வந்த இவருக்கு இடையில் எந்தவித வாய்ப்பும் இல்லாமல் இருந்தார். ஆனால் தற்போது லியோ படத்தின் மூலம் திரும்பி வந்தவர், இடம் பொருள் ஏவல் தெரியாமல் பேசிய காரணத்திற்காக இவருடைய கேரியரே ஒண்ணுமில்லாமல் போகும் அளவிற்கு பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட தியாகராஜ பாகவதர்க்கே அந்த நிலைமை என்றால் மன்சூர் அலிகான் எம்மாத்திரம்.

Also read: மன்சூர் அலிகான் செய்த காரியத்தால் லோகேஷ் எடுத்த அதிரடி முடிவு.. லியோவில் நடிக்க வைத்து தான் பெரிய தவறு

Trending News